அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 14, தை – 1, மொஹரம் – 27 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பொங்கல் பண்டிகை: தமிழர்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும் .. | |||||
நுகர்பொருள் வாணிபக்கழகம் 30000 பணியாளர்களுக்கு ரூ.350 ஊக்கத் தொகை ... | |||||
தமிழகத்தின் மொத்தக் கடன் 74858 கோடி ரூபா கருணாநிதி தெரிவிப்பு | |||||
ஹைத்தி தீவில் பயங்கர நில நடுக்கம்; 1000-க்கும் மேற்பட்டோர் பலி | வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அமைதிக்கான இந்திரா காந்தி ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
இன்று: அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் | |||||
தைப்பொங்கல்: தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. | |||||
தமிழ்ப் புத்தாண்டு: தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதலாம் நாளே என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டு அறிவித்தது. 1920 களில் இருந்தே தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாக தை முதலாம் நாளைக் கொண்டாட வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் கூறிவந்தனர். இதனை அரசு ஏற்பு பெற்ற முடிவாக 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு சித்திரை முதலாம் நாளே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. | |||||
1539 | ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது. | ||||
1690 | கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது. | ||||
1974 | திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் | ||||
பிறப்புகள் | |||||
1977 | நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர் | ||||
இறப்புகள் | |||||
2000 | எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920) எம். வி. வெங்கட்ராம் தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
522 | விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும். | ||||
viruppaRAch sutrRam iyaiyin aruppaRA aakkam palavum tharum. | |||||
The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blows. | |||||
பொருள் | Meaning | ||||
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும். | If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
தர்மம் செய்யாவிட்டாலும் தர்மம் செய்வதைத் தடுக்கக் கூடாது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிசுடர்(பெ.) | erisudar | ||||
பொருள் | Meaning | ||||
1. கொழுந்து விட்டெரியும் நெருப்பு Kozun-thu vitteriyum n-eruppu. 2. மிக்க ஒளி (mikka oLi) 3. சூரியன் (sooriyan) | 1. Flames of fire
2. Great light 3. Sun | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment