Sunday, January 3, 2010

Daily news letter 03-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 03,  மார்கழி – 19,  மொஹரம் – 16

முக்கிய செய்திகள்

வரலாறு காணாத பனி மூட்டத்தால் நேற்று வட மாநிலங்கள் முடங்கின

டெல்லியில் கடும் பனி: சென்னை விமானங்கள் 3 மணி நேரம் தாமதம்

உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் பேரணிக்கு ஆந்திர ஐகோர்ட்டு அனுமதி

ரூ.272 கோடி பொங்கல் போனஸ்

நிலச்சரிவு சேதம் சீரமைப்பு ஊட்டி மலை ரயில் வெள்ளோட்டம்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1888

91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.

1924

பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

1925

இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.

1932

பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

1957

முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

1977

ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பிறப்புகள்

1740

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் (இ. 1799)

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.

1969

மைக்கேல் சூமாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த பார்முலா 1 ஓட்டுனர்

இறப்புகள்

2005

ஜே. என். டிக்சித், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1936)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.14

தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal)

2.1.13

Evaluate And Entrust

It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities.

510

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

n-anmaiyum theemaiyum n-Adi n-alampurin-tha

thanmaiyAn aaLap padum

Who good and evil scanning, ever makes the good his joy;

Such man of virtuous mood should king employ.

பொருள்

Meaning

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking

இன்றைய பொன்மொழி

ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும்.

இன்றைய சொல்

Today's Word

எமகாதகன் (பெ.)

emakAthakan

பொருள்

Meaning

1.     செயல்திறன் மிக்கவன் (seyalthiRan mikkavan)

1.     Man of exceptional ability

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: