அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 06, கார்த்திகை – 20, ஜுல்ஹேஜ் – 18 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினகரன் பதவி உயர்வுக்கு ... | · லூதியானாவில் பயங்கர கலவரம்: ஒருவர் பலி; ஊரடங்கு உத்தரவு அமல் | ||||
· பள்ளி வேன் குளத்தில் மூழ்கி 10 பேர் பலி: வேதாரண்யம் விபத்து ... | · ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1768 | பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. | ||||
1884 | வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. | ||||
1897 | வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது. | ||||
1917 | கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது. | ||||
1957 | வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை. | ||||
1971 | இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. | ||||
1992 | அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் இடிக்கப்பட்ட நாள். | ||||
2006 | செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது. | ||||
இறப்புகள் | |||||
1956 | பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891) | ||||
1982 | க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933) | ||||
இன்றைய சிறப்பு மனிதர் | |||||
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் "பண்டைய இந்தியாவின் வர்த்தகம்' என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், "இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு' என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. "பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்' என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். "ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||
484 | ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் | ||||
njAlam karuthinung kaikUdung kAlam karuthi idaththaR seyin | |||||
The pendant world's dominion may be won, In fitting time and place by action done | |||||
பொருள் | Meaning | ||||
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். | Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
துணிவான நெஞ்சம் போர்க்களத்தில் பாதி வெற்றிக்கு சமம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
ஞாலம் (பெ.) | njAlam | ||||
பொருள் | Meaning | ||||
1. பூமி (bhUmi) | 1. earth | ||||
2. உலகம் (ulagam) | 2. world, universe | ||||
3. சான்றோர், உயர்ந்தோர் (sAndRor, uyarn-thOr) | 3. the wise, the great, the learned | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment