அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 11, கார்த்திகை – 25, ஜுல்ஹேஜ் – 23 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· செம்மொழி மாநாட்டுக்காக ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதி : ஸ்டாலின் | |||||
· நியாயம் கிடைக்க போர் தொடுப்பதில் தவறில்லை : நோபல் பரிசு பெற்ற ... | · கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து தமிழகத்திற்கு ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1816 | இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது. | ||||
1946 | ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது. | ||||
பிறப்புக்கள் | |||||
1882 | சுப்பிரமணிய பாரதி, இந்தியக் கவிஞர் (இ. 1921) | ||||
1931 | ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990) | ||||
1935 | பிரணப் முக்கர்ஜி, இந்திய அரசியல்வாதி | ||||
1958 | ரகுவரன், நடிகர் (இ. 2008) | ||||
1969 | விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர் | ||||
இறப்புக்கள் | |||||
2004 | எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916) | ||||
இன்றைய சிறப்பு மனிதர்கள் | |||||
எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:
பத்ம பூசண் - 1954 சங்கீத கலாநிதி - 1968 ராமன் மகசேசே விருது - 1974 பத்ம விபூசண் - 1975 காளிதாச சன்மான் - 1988 நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990 பாரத ரத்னா – 1998
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும். | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||
489 | எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். | ||||
eythaR kariyathu iyain-thakkAl an-n-ilaiyae seythaR kariya seyal. | |||||
When hardest gain of opportunity at last is won, With promptitude let hardest deed be done. | |||||
பொருள் | Meaning | ||||
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும். | If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity). | ||||
இன்றைய பொன்மொழி | |||||
விடாமுயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக் கொள். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எதிர்ப்பாடு (பெ.) | EthirppAdu | ||||
பொருள் | Meaning | ||||
1. காணும்படி நேரிடுதல், சந்தித்தல் | 1. encounter, meeting | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment