Tuesday, December 22, 2009

Daily news letter 22-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 22,  மார்கழி – 7,  மொஹரம் – 4

Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc
Also the winner will be honored during the program. Click here for more details.

முக்கிய செய்திகள்

·      தெலங்கானா:​ இன்று முடிவு- பிரதமர் அறிவிப்பு

·      சென்னையில் 11 ஆயிரம் போலீஸ்

·      கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புது ரயில்

·      4 புதிய ரயில் சேவை - நாளை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

·      விடுதலைப்புலிகளின் ஆயுத கப்பல் இலங்கை அரசிடம் பிடிபட்டது ...   

·      கர்கரே,​​ காம்டேயை நான் சுட்டுக்கொல்லவில்லை: கசாப் வாக்குமூலம்

·      சபரிமலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது 3 பேருக்கு வலைவீச்சு

·      விடுதலைப்புலிகளின் ஆயுத கப்பல் இலங்கை அரசிடம் பிடிபட்டது ...

·      இந்திய அணி அபார வெற்றி

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1849

 ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

1851

 இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

பிறப்புகள்

1666

 குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708)

1887

 இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

இன்றைய சிறப்பு மனிதர்கள்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.

மேலும் படிக்க: சீனிவாச இராமானுஜன்

குரு கோவிந்த் சிங் (டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பட்னாவில் பிறந்தவர். 1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பை சீக்கியமதத்தின் வாழும் குருவாக்கினார்.

மேலும் படிக்க: குரு கோவிந்த் சிங்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

siRupadaiyAn sellidam saerin uRupadaiyAn

uukkam azin-thu vidum

Though fort be none, and store of wealth they lack,

'Tis hard a people's homesteads to attack!.

பொருள்

Meaning

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

இன்றைய பொன்மொழி

மனப்பொருத்தம் இருந்தால் மற்ற பொருத்தம் தேவையில்லை.

இன்றைய சொல்

Today's Word

எதிரிடு (பெ.)

ethiridu

பொருள்

Meaning

1.     எதிர் (ethir)

2.     மாறுபடு (mARupadu)

1.     Oppose

2.     Be opposed, be at variance

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: