09-05-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் சித்திரை – ௨௭ (27 ),புதன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும். குறளும் பொருளும் - 1169 காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல் கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் நெடிய கழியும் இரா. Translation: More cruel than the cruelty of him, the cruel one, In these sad times are lengthening hours of night I watch alone. பொருள்: ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை Explanation: The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me. தெரிந்து கொள்ளுங்கள் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமீடு அளவில் புதனை விடப் பெரியது. "நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... யே தோஸ்தி ஹம் நஹி சோடேங்கே..... Phytate என்ற வில்லன் எப்படி நம் உடலில் சேர வேண்டிய சக்திகளை துடைத்துக் கொண்டு செல்கிறார் எனவும், வேகவைக்கப்ட்ட அரிசியில் உள்ள இச் சக்திகளை எப்படி பழைய சாதம் உண்பதன் மூலம் திரும்பப் பெற முடியும் எனவும் பார்த்தோம். நனைத்து வைத்தால் Phytate தான் சக்திகளை இழந்து நமக்கு தேவையான தாது சக்திகளை தரும் எனவும் அறிந்தோம். உடனே நம் நினைவுக்கு வரும் இன்னொரு உணவு இட்லி/தோசை. இங்கும் நாம் அரிசியியையும், உளுந்தையும் ஊற வைக்கிறோம். அரைக்கிறோம் பிறகு அதை நொதிக்கிறோம் (fermenting). அரிசியும் பருப்பும் என்பது எப்படி பிரட் அண்ட் பட்டர், சிப்ஸ் அண்ட் டிப் போல ஒன்றுக்கொன்று இணைந்து சுவை, பலன் தருகிறதோ அதுபோல. இரண்டிலும் ப்ரோடீன் அதிகம் இல்லை எனினும் ஒன்றாக சேரும்போது இச்சக்தி அதிகரிக்கிறது. மேலும் உளுந்தில் Omega-3 இதயத்தின் நண்பன் மற்ற பருப்புக்களை விட மூன்று மடங்கு அதிகம் உள்ளது. எனவே அரிசியும், உளுந்தும், நனைத்தலும்,நொதித்தலும் என அனைத்து நல்லதையும், ஆவியில் வேக வைப்பதால் சக்திகளை இழக்காமலும், நமக்கு இட்லி எனும் அற்புத உணவு தரும் பலன்களை எழுதிக் கொண்டே போகலாம். அரிசியையும், உளுந்தையும் நனைத்து வைக்கும் முதல் காரணம் அதிலுள்ள Phytateஐ குறைக்க. அரிசியை பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது உளுந்தைப் பற்றி பார்ப்போம். உளுத்தம் பருப்பில் Resistant Starch (Resistant starch is a type of carb that will typically make its way all the way down to the large intestine without being digested. Once it arrives in the large intestine, it can help support the growth of desirable bacteria in that area of the digestive tract.) அதிகம் உள்ளது. இது சிறுகுடலில் செரிக்கப் படாமல் செல்வதால் இதன் Indigestable Fraction மற்ற பருப்புக்களைவிட அதிகம். இது நமது செரிமான உறுப்புக்களின் நலத்திற்கு நல்லது. குறிப்பாக Colon எனப்படும் செரிமான உறுப்பின் கடைசி பகுதிக்கு இது மிகுந்த நலம் சேர்க்கிறது. Colonக்கு என்ன வேலை என்று பார்த்தால், உணவின் அனைத்து சக்திகளையும் நம் சிறுகுடல் செரித்து, தேவையான சக்திகளை பிரித்துவிட்டு, மற்றவற்றை கழிவு என ஒதுக்குகிறது. சிறுகுடல் கழிவு என ஒதுக்கிய சமாச்சாரத்தை, இந்த Colon பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆராய்ந்து அதிலுள்ள , நீர், உப்பு, சில தாதுக்களை பொறுக்கி எடுக்கிறது. சிறுகுடலளவு முக்கிய பங்கு இல்லை எனினும், தன்னால் முடிந்தவரை உணவின் சக்திகளை உறிஞ்சி எடுக்கிறது. மாம்பழத்தின் அனைத்து சதைப்பகுதிகளையும் முடிந்த அளவு வெட்டிய பிறகும், அதன் கொட்டையை தூக்கி எறியாமல் கடைசி வரை சுவைக்கிறோமே அதுபோல. இந்த உளுந்தில் உள்ள Resident Starch சிறுகுடலை தாண்டி colon பகுதிக்கு சென்று இப்பகுதிக்கு தேவையான butyric acid ஐ உருவாக்க உதவும் probiotic பாக்டீரியாக்கள் அதிகம் உருவாக உதவுகிறது. இதனால் சக்திகள் மீட்கப்படுவது மட்டுமல்ல,இப்பகுதிக்கு தேவையான அமில சுரப்பி நம்கு வேலை புரிவதால் colon cancer வரும் வாய்ப்பும் குறைகிறது. நாம் இன்று probiotic என்றால் என்னவென்றே தெரியாமல், கஜோல் சொல்கிறார் என சில பானங்களை காசு கொடுத்து வாங்கி அருந்துகிறோமே அந்த நல்ல probitoc சக்தியானது நம் இந்திய உணவான இட்லி, தோசை, ஊத்தப்பம், டோக்ளா, குல்ச்சா, தயிர் , மோர் ஆகியவற்றில் அதிகம் உள்ளது. modern food என்ற பெயரில் இந்திய உணவுகளை தவிர்த்து பின் பாக்டீரியா உருவாக்க இன்னும் அதிகம் செலவழிக்கிறோம். அதைவிட நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ கண்டுபிடித்த இந்த நல்ல உணவுகளை உண்ணலாமே... குறிப்பு: · உளுத்தின் முழு சக்தியையும் அறிய http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=2. இதன் முழு சக்தியையும் அறிந்த பிறகு, சக்தி என்றாலே நினைவுக்கு வரும் அனுமாரின் பிரசாதமாக மிளகுடன் முழு -உளுந்து வடை கொடுப்பதில் ஒரு இணைப்பு தெரிகிறது. · உளுந்து ஊற வைத்த நீரை எறிவது நலம் ஏனெனில் இநீரில் pytrate மற்றும் tannin உள்ளது.வாய்வு உண்டாகும் சில காரணப் பொருள்களும் ஊற வைத்த நீருடன் வெளியேறுகிறது. · உளுந்தின் கரு நிற தோல் பல சக்திகளை கொண்டது. எப்படி அடர்ந்த நிறங்கள் கொண்ட காய் கனிகள் உடலுக்கு நல்லதோ அப்படி இதுவும் நல்லது. முடிந்தவரை உபயோகிக்கவும். · நமது உடலுக்கு 20 வகையான அமினோ அமிலங்கள் தேவை. உடலில் 11 வகையான அமினோ அமிலங்கள் உருவாகிறது. மீதி 9 பல உணவுகள் மூலமாக உடலுக்குள் சேர்க்கிறது. அரிசியில் Lysine எனும் ஒரு முக்கிய அமிலம் இல்லை; அது உளுந்தில் உள்ளது. உளுந்தில் methionine இல்லை அது அரிசியில் உள்ளது. இதுதான் இந்த இணைப்பின் சக்தி. ஒன்றுபட்டால் ஒவ்வொரு சக்தியும் இணைந்து பலன் தரும். அதனால் தான் வாருங்கள், நம் சங்கத்தில் இணையுங்கள், பலன் பெறுங்கள், பலன் தாருங்கள் என நிரந்தர உறுப்பினர் சேர்க்கைக்கு அன்புடன் அழைக்கிறோம். நிரந்தர உறுப்பினர் சேர்க்கை (Life Membership) அவ்வை தமிழ்ச் சங்கம், தனது பணிக்களை விரிவாக்கம் செய்யும்வகையில் முதல் முறையாக நிரந்தர உறுப்பினர்களை(Life Membership)சேர்க்கும் பணியை துவங்க இருக்கிறது. இந்த விரிவாக்கம் மூலம் சங்கப்பணி செய்ய தன்னார்வலர்கள் ( Volunteers) அதிகம் கிடைக்கவும், சங்கத்தின் வளர்ச்சிக்குஅவர்கள் மூலம் அறிவுரைகள், செயல்பாட்டில் முன்னேற்றங்கள்என பல விதங்களில் இச்சங்கம் தன் வேர்களை ஆழமாகஊன்ற வகை செய்ய முடியும் எனும் நம்பிக்கையுடன் இப்பணிதுவங்குகிறது.. இந்த நிரந்தர உறுப்பினர்கள் சங்கத்தின் செயற்குழுவில் (Management Committee) இடம்பெற வாய்ப்புள்ளதால் வரும் காலங்களில் தங்கள் திறன் மூலம் சங்கத்தை நிர்மாணித்துமேலும் விரிவடையச் செய்யவும்,பற்பல புதிய முயற்சிகள் எடுக்கவும் வழி உண்டு. மேலும் இந்த சந்தாத் தொகை வைப்பு நிதியில் (FIXED DEPOSIT)வைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் வட்டித்தொகையை சங்கத்தின் மாத நிகழ்சிகள் நடத்த பயன் படுத்தலாம் எனவும்தற்போதைய செயற்குழு கருதுகிறது. நிரந்தரஉறுப்பினர்களுக்கான கட்டணம்: ரூபாய் 5000/-(Rupees Five Thousand Only) மட்டுமே.இச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினராகவும்,உங்களின் சக்தியை தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், தமிழர் நலம் என பல வகைகளில் பணி இச் சங்கத்தின் பணிகளோடு இணைத்து மேலும் பல நற்பணிகள் புரியவும்முன்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஆர்வலர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய: http://www.avvaitamilsangam.org/downloads/Membership_Form.doc வங்கிக் கணக்கில் நேரடியாக சந்தா செலுத்த விரும்புவோர் விவரங்களைப் படிக்க http://www.avvaitamilsangam.org/downloads/BANK_DETAILS.pdf இதுவரை வருடம் இருமுறை கோடை விழா மற்றும் இந்திய நடனக்கலை விழா என முக்கிய விழாக்களை இத் தமிழ்ச் சங்கம் எடுத்து வருகிறது. இவ்விரண்டுமே இப்பகுதி மக்களிடையே மிகப்பிரபலமானது. கோடை விழாவில் தமிழர்களுக்கு, தமிழுக்கு, தமிழ் கலை, பண்பாட்டிற்கு பணி புரியும் சிறந்தோற்கு அவ்வை விருதுகள் வழங்குவதும், இந்திய நடனக் கலை விழாவில் நடனம் பயிலும் இளம் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் நடனக் கலை விழாவையும், இந்தியப் பண்பாட்டின் சிறப்பை விளக்க பல மாநில நடனங்களை ஓரிடத்தில் இணைப்பதும் நம் சிறப்பு. உங்கள் ஒத்துழைப்பு, இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உதவும். Some of the major Events done by Avvai Tamil Sangam so far:- Event Name | Month & Year | Cultural Cause | Social Cause | Kodai Vizhaa | Aug 2008 | Tamil Programs, Drama Songsl | | Tamilnadu Cultural Festival | Jan 2009 | Dances of India Festival with Special Mention on Folk Dances of Tamilnadu | Respect Indian Culture which is Rich and Old | Kodai Vizha | July 2009 | Competition to children, songs & Dance | Healthmela with Homeopathy, Ayurveda and Allopathic cares | Awareness Program on Organ Donation | Jan 2010, | Dances of India Festival with Special Mention on Folk Dances of Kerala and Rajasthan | Organ Donation on a way to Extend the life | Kodai Vizha | Aug 2010 | Avvai Awards, Karuththarangam, | Cancer Awareness Camp | Awareness Program on Creating Greens | Jan 2011, | Dances of India Festival with Special Mention on Folk Dances of Punjab and Haryana | Create Greens, Plant a Tree and plan the Future | Kodai Vizha | Aug 2011 | Avvai Awards, Tamil Cultural Programs | | Awareness Program On Save Energy Resources | Jan 2012 | Dance of India with Special Mention on Folk Dances of Odissa | Save Energy Resources | LOOKING FOR A SUITABLE BRIDEGROOM .. 80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits, OBC, employed in Delhi. Contact :09944993186. நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 11 May 2012 6.30 PM | India International Centre, Lodi Estate ANNEXE (Behind Islamic Centre) Lecture Room-II | Overview of Carnatic Music with a focus on Madurai Mani Iyer to Celebrate his Centenary Year Speaker: Dr S.A.K. Durga, eminent ethno-musicologist and Member of the Experts Committee, Music Academy, Madras Chair: Shri S. Kalidas, music critic | IIC | Indrani Majumdar IIC Programme Office programmeiic@gmail.com | 12/5/2012 3 PM | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. | இலக்கியச் சந்திப்பு: 2012/3, கரு:'போர்' பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும் மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் - திரு கே. எஸ். ராஜேந்திரன்-, தேசிய நாடகப் பள்ளி - 30 நி. நீதிக்கான போரும் நீதியான போரும் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில் - திரு க. திருநாவுக்கரசு, மொழிபெயர்ப்பாளர் - 15 நி. கலந்துரையாடல் 30 நி. | தில்லிகை -தில்லி இலக்கிய வட்டம் | | 12/5/2012 3 PM to 9.30 PM & 13/5/2012 7:30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | 16th Lakshmi Nrusimha Jayanthi Utsavam On 13/5/2012 at 6 PM Tharanga Gaanam by Ghorakavi Shri. Krishna Sampath Kumar & Brundham Hyderabad. | Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi & Vasundhara Enclave Sarveswara Samaj (VESS) regd | Shri Shankar 093122 55912/ 22621981 Shri Ramaseshan 099999 87227/ 43041977 Shri R.K. Vasan 9810730983 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment