08-05-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் சித்திரை – ௨௬ (26 ),திங்கள், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend எனக்கு வேண்டும் என்பது ஆசை; எனக்கு மட்டும் வேண்டும் என்பது பேராசை. குறளும் பொருளும் - 1168 காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல் மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. Translation: All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps!. பொருள்: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது. Explanation: The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion. தெரிந்து கொள்ளுங்கள் மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ குணம் கொண்ட, 'ஈட்டி' மரத்தால் செய்யப்பட்டன. "நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... Old is Gold. காலையில் டைனிங் டேபிளில் அமர்ந்து TVல் " உப்பு கருவாடு.. ஊறவைச்ச சோறு" என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே கார்ன் ப்ளெக்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்த மகனிடம், இந்த வேலைக்காரி இன்னும் வரலை பாரு எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியிருக்கு என்று நடக்க முடியாமல் பருமனான உடலை தூக்கிக் கொண்டு மகனுக்கு பாலை எடுத்து வந்தாள் முதலாளி அம்மா. யம்மா.. ஸ்கூலுக்கு நேரமாச்சும்மா சாப்பாடு போடும்மா என்ற மகனுக்கு வருத்தத்துடன் பழைய சோற்றையும் வெங்காயத்தையும் எடுத்து வைத்துவிட்டு நான் போயிட்டு வரேன்ப்பா என்று கூறி அவசர அவசரமாக நேற்றைய சோற்று கஞ்சியை குடித்துவிட்டு வேலைக்கு ஓடினாள் வேலைக்காரி. இது பல கதைகளில் நாம் படித்தது. என்றும் மாறாதது. மாற வேண்டியது. ஏனெனில் வசதியில்லாமல் வாழ்பவர்கள் மட்டுமே சாப்பிடுவதாக கூறப்படும் இந்த இரண்டு உணவுகளும் பொதுவாக அனைவருமே சாப்பிடக் கூடியவை. சமுதாயப் படி நிலை (status) காரணமாக மாறுமே ஒதுக்கி வைக்கப்படும் அற்புத உணவில் அப்படி என்னதான் உள்ளது? Panta Bhat என பெங்கால் பகுதியிலும், Pakhal Bhat என ஓடிசா பகுதியிலும் உண்ணப்படும் பழைய சோறு என நாம் அழைக்கும் உணவில் அப்படி என்னதான் இருக்கிறது? அதற்கு மட்டும் ஏன் ஒரு தனிச் சுவை? இதை உண்டால் ஏன் ஒரு தனி தெம்பு? அரிசி என்றாலே கார்போஹைட்ரேட் மட்டுந்தான் ஞாபகம் வரும். ப்ரோடீன் போன்ற சக்திகளோ, கால்சியம், இரும்பு போன்ற சக்திகளைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஏன்? அரிசியில் இந்த சக்திகள் இல்லையா? அரிசி சோறு ஒரு வயிற்றை நிரப்பும் உணவாக கருதப்படுகிறதே தவிர அதில் ஊட்டச்சக்திகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுவதில்லை. ஏனெனில் இதில் இரண்டு வில்லன்கள் உள்ளனர். முதல் வில்லன் - சோறு மல்லிகைப்பூ போல் இருக்கவேண்டும் என்பதற்காக அதை செய்யும் பாலிஷ். இது அரிசியிலுள்ள கொஞ்ச நஞ்ச சக்திகளையும் அழிக்கிறது. ப்ரௌன் ரைஸ் நல்லது என்று அறிந்தும், நாம் செய்யும் தவறு நிரத்திற்காக அதை ஒதுக்குவது. இரண்டாவது வில்லன் இதிலுள்ள Phytate. Phytate என்றால் என்ன? Phytate எனப்படும் Phytic Acid எல்லா விதையின் மேல்புறம், தவிடு இவற்றில் உள்ள பொருள். இது நம் உடளில் ஜீரணிக்கப் படுவதில்லை. மேலும் இதன் இணைத்திழுக்கும் சக்தி உணவுப்பதையில் உள்ள கால்சியம், ஜின்க், காப்பர், அயர்ன் அனைத்துடன் இணைந்து அதை சக்திகளை தன்னோடு கவர்ந்திழுத்து இச்சக்திகள் நம் உடலுக்கு கிடைக்காமல் செய்யப்படுகிறது. இந்த Phytate டினால் இந்த தாதுக்களும் உடலில் கரைவதில்லை எனவே இச் சக்திகளை நாம் இழக்கிறோம். இன்னொரு விஷயம், இது இத்தனை சூட்டில் வந்தபோதும் தன் வில்லத்தனத்தை குறைப்பதில்லை ( எம்.ஜி.ஆர் இடம் அடி வாங்கியும் திருந்தாத நம்பியார் போல ). அதனால் அரிசியை மட்டுமே முக்கிய உணவாக கொண்டு காய் கனிகளை குறைத்து உண்பவர்கள் தாது குறைபாடு, எலும்பில் கால்சியம் குறைபாடு எனும் நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாதை மாறி செல்கிறோமோ? இல்லை. விஷயத்திற்கு வருவோம். வேக வைத்தாலும் தானியங்களின் தோலிலிருந்து வெளியேறாத Phytate, வெந்த சோற்றை நீரில் ஊற வைக்கும்போது hydrolysis முறையில் அதிலுள்ள நொதிப் பொருள் (enzymes), உயிர் பொருள்கள் (organism) போன்றவை உடைந்து வெளியேறி, Phytic Acid தன்மையை குறைக்கிறது. இதனால் தாதுப் பொருள்கள் இணைப்பு தன்மை குறைந்து இவை உணவுடன் கலக்கிறது. இதனால் ஊறவைத்த பழைய சாதத்தில், சுடு சோற்றை விட கால்சியம், இரும்பு, ஜின்க்,வைட்டமின்B, ப்ரோடீன் போன்றவை அதிகம் உள்ளது. நேற்று Ahmedabad Tamil Group முக நூலில் படித்தது. ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும் ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும். (நன்றி: தமிழ் தமிழானவள்) இது வடி கஞ்சிக்கும் பொருந்தும், பழம் சோற்று நீராகாரதிற்கும் பொருந்தும். ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும் அரிசியில் சிறந்தது தவிடு அதிகம் நீக்கப் படாத பிரவுன் ரைஸ், அடுத்தது புழுங்கல் அரிசி, அடுத்தது பச்சரிசி. இவை அனைத்தும் அதிக சக்தி அளிப்பது பழைய சோறாக இதன் உண்ணும்போது. பழைய சோறு மற்றும் வெங்காயம் சாப்பிட்டே உழைப்பாளர்கள் எப்படி சக்தி கொண்டனர் என்பதின் மர்மம் புரிகிறதா? தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு பழைய சாதமும் சக்தியை தானே தந்தது. இனி பழைய சாதம் என்பது ஏழை வர்க்கத்தின் உணவு என ஒதுக்காதீர். குழந்தைகளுக்கு அதன் சுகத்தை அனுபவிக்க சொல்லிக் கொடுங்கள். நிரந்தர உறுப்பினர் சேர்க்கை (Life Membership) அவ்வை தமிழ்ச் சங்கம், தனது பணிக்களை விரிவாக்கம் செய்யும்வகையில் முதல் முறையாக நிரந்தர உறுப்பினர்களை(Life Membership)சேர்க்கும் பணியை துவங்க இருக்கிறது. இந்த விரிவாக்கம் மூலம் சங்கப்பணி செய்ய தன்னார்வலர்கள் ( Volunteers) அதிகம் கிடைக்கவும், சங்கத்தின் வளர்ச்சிக்குஅவர்கள் மூலம் அறிவுரைகள், செயல்பாட்டில் முன்னேற்றங்கள்என பல விதங்களில் இச்சங்கம் தன் வேர்களை ஆழமாகஊன்ற வகை செய்ய முடியும் எனும் நம்பிக்கையுடன் இப்பணிதுவங்குகிறது.. இந்த நிரந்தர உறுப்பினர்கள் சங்கத்தின் செயற்குழுவில் (Management Committee) இடம்பெற வாய்ப்புள்ளதால் வரும் காலங்களில் தங்கள் திறன் மூலம் சங்கத்தை நிர்மாணித்துமேலும் விரிவடையச் செய்யவும்,பற்பல புதிய முயற்சிகள் எடுக்கவும் வழி உண்டு. மேலும் இந்த சந்தாத் தொகை வைப்பு நிதியில் (FIXED DEPOSIT)வைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் வட்டித்தொகையை சங்கத்தின் மாத நிகழ்சிகள் நடத்த பயன் படுத்தலாம் எனவும்தற்போதைய செயற்குழு கருதுகிறது. நிரந்தரஉறுப்பினர்களுக்கான கட்டணம்: ரூபாய் 5000/-(Rupees Five Thousand Only) மட்டுமே.இச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினராகவும்,உங்களின் சக்தியை தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், தமிழர் நலம் என பல வகைகளில் பணி இச் சங்கத்தின் பணிகளோடு இணைத்து மேலும் பல நற்பணிகள் புரியவும்முன்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஆர்வலர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய: http://www.avvaitamilsangam.org/downloads/Membership_Form.doc வங்கிக் கணக்கில் நேரடியாக சந்தா செலுத்த விரும்புவோர் விவரங்களைப் படிக்க http://www.avvaitamilsangam.org/downloads/BANK_DETAILS.pdf இதுவரை வருடம் இருமுறை கோடை விழா மற்றும் இந்திய நடனக்கலை விழா என முக்கிய விழாக்களை இத் தமிழ்ச் சங்கம் எடுத்து வருகிறது. இவ்விரண்டுமே இப்பகுதி மக்களிடையே மிகப்பிரபலமானது. கோடை விழாவில் தமிழர்களுக்கு, தமிழுக்கு, தமிழ் கலை, பண்பாட்டிற்கு பணி புரியும் சிறந்தோற்கு அவ்வை விருதுகள் வழங்குவதும், இந்திய நடனக் கலை விழாவில் நடனம் பயிலும் இளம் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் நடனக் கலை விழாவையும், இந்தியப் பண்பாட்டின் சிறப்பை விளக்க பல மாநில நடனங்களை ஓரிடத்தில் இணைப்பதும் நம் சிறப்பு. உங்கள் ஒத்துழைப்பு, இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உதவும். Some of the major Events done by Avvai Tamil Sangam so far:- Event Name | Month & Year | Cultural Cause | Social Cause | Kodai Vizhaa | Aug 2008 | Tamil Programs, Drama Songsl | | Tamilnadu Cultural Festival | Jan 2009 | Dances of India Festival with Special Mention on Folk Dances of Tamilnadu | Respect Indian Culture which is Rich and Old | Kodai Vizha | July 2009 | Competition to children, songs & Dance | Healthmela with Homeopathy, Ayurveda and Allopathic cares | Awareness Program on Organ Donation | Jan 2010, | Dances of India Festival with Special Mention on Folk Dances of Kerala and Rajasthan | Organ Donation on a way to Extend the life | Kodai Vizha | Aug 2010 | Avvai Awards, Karuththarangam, | Cancer Awareness Camp | Awareness Program on Creating Greens | Jan 2011, | Dances of India Festival with Special Mention on Folk Dances of Punjab and Haryana | Create Greens, Plant a Tree and plan the Future | Kodai Vizha | Aug 2011 | Avvai Awards, Tamil Cultural Programs | | Awareness Program On Save Energy Resources | Jan 2012 | Dance of India with Special Mention on Folk Dances of Odissa | Save Energy Resources | LOOKING FOR A SUITABLE BRIDEGROOM .. 80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits, OBC, employed in Delhi. Contact :09944993186. நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 12/5/2012 3 PM | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. | இலக்கியச் சந்திப்பு: 2012/3, கரு:'போர்' பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும் மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் - திரு கே. எஸ். ராஜேந்திரன்-, தேசிய நாடகப் பள்ளி - 30 நி. நீதிக்கான போரும் நீதியான போரும் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில் - திரு க. திருநாவுக்கரசு, மொழிபெயர்ப்பாளர் - 15 நி. கலந்துரையாடல் 30 நி. | தில்லிகை -தில்லி இலக்கிய வட்டம் | | 12/5/2012 3 PM to 9.30 PM & 13/5/2012 7:30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | 16th Lakshmi Nrusimha Jayanthi Utsavam On 13/5/2012 at 6 PM Tharanga Gaanam by Ghorakavi Shri. Krishna Sampath Kumar & Brundham Hyderabad. | Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi & Vasundhara Enclave Sarveswara Samaj (VESS) regd | Shri Shankar 093122 55912/ 22621981 Shri Ramaseshan 099999 87227/ 43041977 Shri R.K. Vasan 9810730983 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment