07-05-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் சித்திரை – ௨௫ (25 ),திங்கள், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend வாழ்வதற்காக வேலை செய்யுங்கள்; வேலை செய்வதற்காக வாழாதீர்கள். குறளும் பொருளும் - 1167 காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல் இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். Translation: I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I!. பொருள்: காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன். Explanation: I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live. தெரிந்து கொள்ளுங்கள் மர்மக் கிரகம் என்பது சூரியக் குடும்பத்தில் வானியலாளர்களால் தேடப்படும் உள்ள ஒரு கிரகமாகும். "நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... சுண்டைக்காய் (Solanum torvum – Turkey Berry) விஷயந்தான்... சரவணபவனில் மதிய உணவை ஒரு கட்டு கட்டும்போது தவறாமல் பொறுக்கி ஒதுக்கி வைக்கும் ஒரு விஷயம். கசக்குதப்பா எனவும், எப்படித்தான் இதை சாப்பிடராய்ங்களோ எனவும் பழிப்பவர் பலர். இதை மருந்தாக உண்பவர் சிலர். இதன் சக்தி அறிந்து இதை உண்டால் மருந்துப் பக்கம் போக வேண்டாம் என உண்பவர் மிகச் சிலர். பாட்டி அந்தக் காலத்தில், வாரம் ஒருமுறை தவறாமல் சுண்டைக்காய் கொழம்பு வைக்கும்போது இந்த கிழவியை ஏன் சமையல் கட்டுக்குள் விடற என அலுத்துக் கொண்டு இந்த காயைத் தவிர மற்றதை உண்டது பலர் அனுபவித்தது. இன்றைய மருந்து: Methotrexate- இது ஒரு கான்சர் தடுப்பு மருந்து. குறிப்பாக மார்பகப் புற்று நோய், குடல், கழுத்து, கருப்பை, போன்ற இடங்களில் வரும் கான்சர் வியாதிக்கு மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உண்ணக கூடிய ஒரு மருந்து. இது திசு பிளவு mitotic) ஏற்படுவதை தடுக்க வல்லது. இன்று அன்றே... ஆராய்ச்சியாளர்கள் கணித்தது நம்ம பாட்டி குடுத்த சுண்டைக்காய்க்கு இயற்கையாகவே இந்த மருந்து கொண்டுள்ள அளவு சக்தி இருக்கிறது என. மேலும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இன்றைய மருந்தின் வீரியத்தை தரவல்லது என்பது ஒரு கூடிய சிறப்பு. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்கு வேறு ஏதாவது விளக்கம் தேவையா? இதைப் பற்றி அறிய http://ditonline.info/index.php/ditonline/article/viewFile/10652/5396. இதன் சக்தியை அறிந்தவர்கள் தாய்லாந்து: The green fresh fruits are edible and used in Thai cuisine, being one of the essential elements of the Thai yellow curry. Ivory Coast : The fruits are incorporated into soups and sauces in the Ivory Coast In Tamil Nadu, India, the fruit is consumed directly, or as cooked food like Sundaikkai Sambar, Sundaikkai Poriyal, Sundaikkai Aviyal & Sundaikkai Pulikulambu. After soaking in curd and drying, the final product is fried in oil as Sundaikkai vattral. In siddha medicine - one of the traditional systems of India, Sundaivattral Choornam is used to improve digestion. அதிகம் உபயோகித்து பலனடைந்தவர்கள் நம் முன்னோர்கள் என்றால் நமக்கு பெருமைதானே. இதே பெருமையை நம் சந்ததியினர் நம்மையும் முன்னோர்கள் பட்டியலில் சேர்த்து சொல்ல செய்யவேண்டியதெல்லாம் அடுத்த முறை சரவணா பவன் செல்லும்போதோ, இந்தக் காலத்திலும் ஏதாவது ஒரு பாட்டி இதை சமைக்கும்போதோ இந்தக் கட்டுரையை ஞாபகம் வைத்து கொண்டு இதை வெளியே தள்ளாமல் உள்ளே தள்ளுவதுதான். முகநூலில் மட்டும் போட்டு தமிழன் அறிஞன், தமிழன் புத்திசாலி, தமிழன் இயற்கையிலேயே மருத்துவன் என பெருமைப் பட வேண்டிய விஷயமாக மட்டும் கருதாமல் அதன் தமிழன் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள்ள முயற்சியுங்கள்.. சுண்டைக்காய் : புரதம் 8.3 கிராம், இரும்பு 22.2 மி.கி. கால்ஷியம் 390 மி.கி. பாஸ்பரஸ் 180 மி.கி., வைட்டமின் ஏ 450 மைக்ரோ கிராம் உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் உறுதிபடவும், ரத்த சோகையைப் போக்கவும் உதவும். இதன் பிற பலன்கள்: Hypertensive effect and anti-platelet aggregation activity Aqueous extract from dried fruits of Solanum torvum reduces blood pressure. இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது. Anti- ulcerogenic Solanum torvum revealed the presence of flavanoids, sterols & triterpens which may be responsible for anti-ulcer property. It strength the mucosal barrier through the increase of the mucas and bicarbonate production and reducing the volume of gastric acid secretion or by simply neutralising the gastric activity – குடற்புண் தடுக்கும் சக்தி கொண்டது. Anti-viral activity A new C4 - sulfated isoflavonoid [torvanol A] and steroidal glycoside [torvoside H] together with torvoside A were isolated from methanolic extract of Solanum torvum fruits exhibited antiviral activity. Anti-inflammatory S. torvum extract has anti-inflammatory activity. Solanum torvum extract may act by suppressing the later phase of the inflammatory process by inhibition cyclo-oxgenase involved in the formation of prostaglandin . Antioxidant activity Solanum torvum posses significant antioxidant activity in vitro. Due to antioxidant activity S.torvum used for reducing oxidative stress in diabetes. சுண்டைக்காய் விஷயம்தான் ஆனால் சுகமான விஷயம். திசுக்களின் ஒற்றுமை புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது. இதற்கு இந்த சுண்டைக்காய் சிறிதாக இருந்தாலும் பெரியபங்கு அளிக்கிறது. அதுபோல நம் ஒற்றுமை, நம் கலை , கலாச்சாரம், பண்பாடு இவற்றைக் காத்து, மேலை நாட்டுக் கலாச்சாரம் ( நம் பண்பாட்டிலிருந்து வேறுபட்டுள்ள இது நமக்கு புற்று நோய் போலத்தானே!!) நம் காலாச்சாரத்தை அழிப்பதை தடுக்க வல்லது. ஒற்றுமையின் உருவம் சங்கம். சங்கத்தின் சக்தி உறுப்பினர்கள். வாருங்களேன் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் எனும் சக்தி அளிக்க... நிரந்தர உறுப்பினர் சேர்க்கை (Life Membership) அவ்வை தமிழ்ச் சங்கம், தனது பணிக்களை விரிவாக்கம் செய்யும்வகையில் முதல் முறையாக நிரந்தர உறுப்பினர்களை(Life Membership)சேர்க்கும் பணியை துவங்க இருக்கிறது. இந்த விரிவாக்கம் மூலம் சங்கப்பணி செய்ய தன்னார்வலர்கள் ( Volunteers) அதிகம் கிடைக்கவும், சங்கத்தின் வளர்ச்சிக்குஅவர்கள் மூலம் அறிவுரைகள், செயல்பாட்டில் முன்னேற்றங்கள்என பல விதங்களில் இச்சங்கம் தன் வேர்களை ஆழமாகஊன்ற வகை செய்ய முடியும் எனும் நம்பிக்கையுடன் இப்பணிதுவங்குகிறது.. இந்த நிரந்தர உறுப்பினர்கள் சங்கத்தின் செயற்குழுவில் (Management Committee) இடம்பெற வாய்ப்புள்ளதால் வரும் காலங்களில் தங்கள் திறன் மூலம் சங்கத்தை நிர்மாணித்துமேலும் விரிவடையச் செய்யவும்,பற்பல புதிய முயற்சிகள் எடுக்கவும் வழி உண்டு. மேலும் இந்த சந்தாத் தொகை வைப்பு நிதியில் (FIXED DEPOSIT)வைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் வட்டித்தொகையை சங்கத்தின் மாத நிகழ்சிகள் நடத்த பயன் படுத்தலாம் எனவும்தற்போதைய செயற்குழு கருதுகிறது. நிரந்தரஉறுப்பினர்களுக்கான கட்டணம்: ரூபாய் 5000/-(Rupees Five Thousand Only) மட்டுமே.இச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினராகவும்,உங்களின் சக்தியை தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், தமிழர் நலம் என பல வகைகளில் பணி இச் சங்கத்தின் பணிகளோடு இணைத்து மேலும் பல நற்பணிகள் புரியவும்முன்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஆர்வலர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய: http://www.avvaitamilsangam.org/downloads/Membership_Form.doc வங்கிக் கணக்கில் நேரடியாக சந்தா செலுத்த விரும்புவோர் விவரங்களைப் படிக்க http://www.avvaitamilsangam.org/downloads/BANK_DETAILS.pdf இதுவரை வருடம் இருமுறை கோடை விழா மற்றும் இந்திய நடனக்கலை விழா என முக்கிய விழாக்களை இத் தமிழ்ச் சங்கம் எடுத்து வருகிறது. இவ்விரண்டுமே இப்பகுதி மக்களிடையே மிகப்பிரபலமானது. கோடை விழாவில் தமிழர்களுக்கு, தமிழுக்கு, தமிழ் கலை, பண்பாட்டிற்கு பணி புரியும் சிறந்தோற்கு அவ்வை விருதுகள் வழங்குவதும், இந்திய நடனக் கலை விழாவில் நடனம் பயிலும் இளம் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் நடனக் கலை விழாவையும், இந்தியப் பண்பாட்டின் சிறப்பை விளக்க பல மாநில நடனங்களை ஓரிடத்தில் இணைப்பதும் நம் சிறப்பு. உங்கள் ஒத்துழைப்பு, இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உதவும். Some of the major Events done by Avvai Tamil Sangam so far:- Event Name | Month & Year | Cultural Cause | Social Cause | Kodai Vizhaa | Aug 2008 | Tamil Programs, Drama Songsl | | Tamilnadu Cultural Festival | Jan 2009 | Dances of India Festival with Special Mention on Folk Dances of Tamilnadu | Respect Indian Culture which is Rich and Old | Kodai Vizha | July 2009 | Competition to children, songs & Dance | Healthmela with Homeopathy, Ayurveda and Allopathic cares | Awareness Program on Organ Donation | Jan 2010, | Dances of India Festival with Special Mention on Folk Dances of Kerala and Rajasthan | Organ Donation on a way to Extend the life | Kodai Vizha | Aug 2010 | Avvai Awards, Karuththarangam, | Cancer Awareness Camp | Awareness Program on Creating Greens | Jan 2011, | Dances of India Festival with Special Mention on Folk Dances of Punjab and Haryana | Create Greens, Plant a Tree and plan the Future | Kodai Vizha | Aug 2011 | Avvai Awards, Tamil Cultural Programs | | Awareness Program On Save Energy Resources | Jan 2012 | Dance of India with Special Mention on Folk Dances of Odissa | Save Energy Resources | LOOKING FOR A SUITABLE BRIDEGROOM .. 80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits, OBC, employed in Delhi. Contact :09944993186. நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 12/5/2012 3 PM | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. | இலக்கியச் சந்திப்பு: 2012/3, கரு:'போர்' பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும் மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் - திரு கே. எஸ். ராஜேந்திரன்-, தேசிய நாடகப் பள்ளி - 30 நி. நீதிக்கான போரும் நீதியான போரும் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில் - திரு க. திருநாவுக்கரசு, மொழிபெயர்ப்பாளர் - 15 நி. கலந்துரையாடல் 30 நி. | தில்லிகை -தில்லி இலக்கிய வட்டம் | | 12/5/2012 3 PM to 9.30 PM & 13/5/2012 7:30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | 16th Lakshmi Nrusimha Jayanthi Utsavam On 13/5/2012 at 6 PM Tharanga Gaanam by Ghorakavi Shri. Krishna Sampath Kumar & Brundham Hyderabad. | Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi & Vasundhara Enclave Sarveswara Samaj (VESS) regd | Shri Shankar 093122 55912/ 22621981 Shri Ramaseshan 099999 87227/ 43041977 Shri R.K. Vasan 9810730983 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment