குறளும் பொருளும் - 1087 காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல் கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். Translation: As veil o'er angry eyes Of raging elephant that lies, The silken cincture's folds invest This maiden's panting breast. பொருள்: மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது. Explanation: The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant. உங்களுக்குத் தெரியுமா? பெட்ரோல் டாங்கிகளுக்கு அலுமினிய வண்ணம் பூசப்படுகிறது. இவ்வண்ணம் காற்று உட்புகாமலும் எளிதில் துருப்பிடிக்காத வகையிலும் பாதுகாக்கிறது. நம்மைச் சுற்றி... எந்த ஒரு சக்தியும் சேமிக்கப் பட வேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரும் ஜனவரி 28 & 29 தேதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக "இந்திய நடனக் கலை விழா" ஒன்றிற்கு அவ்வை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவையொட்டி, 28, 29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணி முதல் 8 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 28-1-2012: · சஞ்சய் முகர்ஜி குழுவினரின் இசைக் கருவிகள் வாசிப்பு · பிரசன்னாலயா அமைப்பின் சார்பில் யுவ சக்தி நாட்டிய நாடகம் · நாட்டியார்ச்சனா பரதநாட்டிய மையத்தின் சார்பில் பரதநாட்டியம் · கர்நாடக மாநில நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் · பாமினி சேகர் நிருத்யாலயாவின் சாஸ்திரீய நடன நிகழ்ச்சி · நிருத்யபாரதி நடனப் பள்ளியின் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி · ஒடிசாவின் கொடிபுவா நாட்டுப்புற நடன நிகழ்ச்சி · தேச பக்தி பாடல் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. 29-1-2012: · கர்நாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சியும் · ஹிந்துஸ்தானி தபேலாவின் ஜுகல் பந்தி பஜனை · ஒடிசி நிருத்ய மஞ்சரி அமைப்பு மாணவர்களின் ஒடிசா சாஸ்திரீய நாட்டுப்புறம் · மயூர் விஹார் ஆலயம் சாஸ்திரீய இசை-நடன அமைப்பின் பரதநாட்டியம் · பாமினி சேகர் மாணவர்களின் சாஸ்திரீய நடனம் · ஒடிசாவின் ஒடிசி நடனம் · விஷ்ணுப்பிரியா நாட்டியாலயா அமைப்பின் "அக்னி' ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment