Tuesday, May 17, 2011

Daily news letter 17-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௩  (3) , செவ்வாய்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

மனித இராணுவ வீரர்கள் போன்றோ அவர்களுக்கு மேற்பட்ட செயல்திறனோ கொண்ட தானியங்கிகளால் கட்டமைக்கப்படும் இராணுவமே தானியங்கி இராணுவம் (Robot army) எனலாம். இன்று, போரில் கன்னிவெடிகளையும் குண்டுகளையும் விதைக்கவும் அகற்றவும், வேவு பார்க்க பல தரப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இவற்றின் திறன் மட்டுப்படுத்தப்பட்டதே. பல, மனிதர்களால் இயக்கப்படுவன. விரைவில் ,முற்றிலும் தாமாகவே இயங்கும் தானியங்கி இராணுவ அமைப்பை பயன்படுத்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் தானியங்கி இராணுவங்களை உருவாக்கி வருகின்றன

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சோனியாவிடம் உதவியாளராக பரத்வாஜை அனுப்பலாம்:நிதின் கட்கரி தினமணி 

1.2 கோடி டன் ஆனது ஏப்ரலில் பெட்ரோல், டீசல் தேவை 4% அதிகரிப்பு தினகரன்

தமிழக தேர்தல் முடிவு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது ... தினமலர்

 5-வது வெற்றியை ருசித்தது டெக்கான் தினமணி

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார் தினத் தந்தி

ரூ.3500 கோடி ஆர்டர்  தினகரன்

ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக இருக்கிறார்: நரேந்திர மோடி நக்கீரன்

சென்செக்ஸ் 77; நிப்டி 58 புள்ளிகள் சரிவு  வெப்துனியா

காஷ்மீர் மாநிலத்தில் தொழில்நுட்ப பூங்கா தினமணி

இத்தாலி ஓபன்: ஜோகோவிச், ஷரபோவா சாம்பியன்  தினமணி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.

1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.

1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.

1846 - அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.

1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

1983 - லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

பிறப்புக்கள்

1749 - எட்வர்ட் ஜென்னர் - ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் (இ. 1823)

1974 - செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்

இறப்புகள்

2006 - ஷ்ரத்தா விஸ்வநாதன், தமிழ்த் தொலைக்காட்சி நடிகை

2007 - நகுலன், தமிழ் எழுத்தாளர்

சிறப்பு நாள்

உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்

நோர்வே - அரசியல் நிர்ணய நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  881

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

nizhal-nErum innAtha innA tamarNerum

innAvAm innA seyin.

Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.

பொருள்

Meaning

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

இன்றைய பொன்மொழி

எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: