Wednesday, May 18, 2011

Daily news letter 18-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௪  (4) , புதன்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

இயேசுப் பல்லி என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

காங்கிரஸ் முகவராக செயல்படுகிறார் கர்நாடக ஆளுநர்: வெங்கைய நாயுடு தினமணி

புதிய உள்துறை செயலர் ஷீலா  வெப்துனியா

அமைச்சர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா  தினமணி 

பாகிஸ்தான் பிராந்தியத்தில் மீண்டும் நேட்டோவின் தாக்குதல் தினக்குரல்

தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு தினத் தந்தி

சென்செக்ஸ் 208 புள்ளி சரிவு தினகரன்

தேபேந்திரநாத் சாரங்கி - புதிய தலைமை செயலாளர்! Inneram.com

இந்தியாவை எதிரியாய் கருதும் போக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும் ... வெப்துனியா

சட்டசபை காங்., கட்சித் தலைவராக கோகோய் தேர்வு தினமலர்

சர்வதேச டென்னிஸ்: சானியா தோல்வி தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1565 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.

1652 - வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.

1765 - கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.

1803 - ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.

1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.

1869 - ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.

1897 - ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.

1900 - தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.

1910 - ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது.

1944 - கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1956 - உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.

1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

1990 - பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது.

1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1991 - வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.

2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.

பிறப்புக்கள்

1048 - ஒமார் கையாம், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர் (இ. 1131)

1908 - இயான் பிளெமிங், ஆங்கில எழுத்தாளர் (இ. 1964)

1920 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II (இ. 2005)

1913 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1996)

1933 - தேவகவுடா, இந்தியாவின் 11வது பிரதமர்

1939 - பீட்டர் குருன்பெர்க், ஜெர்மனிய இயற்பியலாளர்

சிறப்பு நாள்

அனைத்துலக அருங்காட்சியக நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  882

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

vaaLpOla pagaivarai anjaRkka anjuka

keLpOl pagaivar thOdarbu

Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!.

பொருள்

Meaning

வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.

இன்றைய பொன்மொழி

சீராக செலவு செய்து பணத்தை சேமித்து வை; அப்படி சேமித்து வைப்பதே சிறந்த வருமானமாக இருக்கும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: