1 நீங்கள் ரத்த தானம் தர விரும்பினால் உங்களின் பெயர், ஊர், ரத்த வகை மற்றும் தொலைபேசி எண்களை எங்களிடம் அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். இந்த முயற்சி, தானம் தர விரும்புவோரின் பட்டியலை தயாரித்து நம் வலை தளத்தில் வெளியிடவும், அவசர காலத்தில் தேவைப்படுவோர் இப்பட்டியல் மூலம் தானம் கொடுப்போரை தொடர்பு கொள்ள வழி செய்யவும் ஆகும்.
இதுவரை 6 பேர் மட்டுமே தங்கள் தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த முயற்சி உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் உதவும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட இடம் சார்ந்த பட்டியல் அல்ல. எனவே உலகின் எம்மூலையில் இருந்தாலும் தயவு செய்து தானம் தர முன்வருவோர் தங்கள் தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
2. ஈகரை வலைதளம் வழங்கும் மாபெரும் கவிதைப் போட்டி
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல்
விதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com . மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லுங்கள்.... http://www.eegarai.net/t55497-4
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 23 ( ௨௩), புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.eegarai.net/ | ||||||||||||||||
உலகத் தமிழர்களின் உறவுப் பாலம். | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
ஒருவரின் பெயருடன் தாயின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
அதிமுக கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ... தினகரன் | ||||||||||||||||
கள்ள ஓட்டு போட்டால் ஒரு வருடம் ஜெயில் தினத் தந்தி | ||||||||||||||||
இலங்கை கேப்டன் சங்கக்கரா பதவி விலகினார் தினத் தந்தி | ||||||||||||||||
மதுரை கலெக்டர், எஸ்.பி., மீது வழக்கு:மு.க. அழகிரி ஆவேசம் தினமலர் | சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிவுடன் நிறைவு வெப்துனியா | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. 1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான். 1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர். 1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது. 1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின. 1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது. 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். 1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது. 1965 - "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது. 1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது. 2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார். பிறப்புகள் 1483 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520) 1815 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876 1911 - பியோதர் லைனென், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1979) 1920 - எட்மண்ட் பிஷர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் 1928 - ஜேம்ஸ் வாட்சன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் 1949 - ஹோர்ஸ்ட் ஸ்டோர்மர், நோபல் பரிசு பெற்றவர் 1963 - ரஃப்வேல் கோர்ரியா, ஈக்குடோர் நாட்டின் அதிபர் இறப்புகள் 1520 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483) 1961 - ஜூல்ஸ் போர்டெட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1870) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.13 | இகல்(Igal) |
2.3.13 |
HATRED | |||||||||||||
குறள் எண் 858 | ||||||||||||||||
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை | ||||||||||||||||
igalirkku ethirsaaithal Akkam athanai migalUkkin vU-kkumAm kedu | ||||||||||||||||
Men think not hostile thought in fortune's favouring hour, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும். | At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓசு (பெ) | VOsu | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. உடல் வலிமை | bodily strength | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment