Tuesday, April 5, 2011

Daily news letter 05-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஈகரை வலைதளம் வழங்கும் மாபெரும் கவிதைப் போட்டி

கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்   2. சமுதாயம்    3, அரசியல்

விதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com . மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லுங்கள்.... http://www.eegarai.net/t55497-4

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 22, செவ்வாய்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://ta.wiktionary.org

தமிழ் விக்சனரி. இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சி.

தெரிந்து கொள்ளுங்கள்  

சிவஞானபோதம் என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்..

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சோனியா இன்று தமிழகத்தில் பிரசாரம் தினமலர் 

கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர கடாஃபி மகன்கள் யோசனை தினமணி

கலெக்டர் சொன்னதால் மு.க.அழகிரி மீது பொய் புகார் அளித்தேன்  தினகரன்

டோனி சிறந்த கேப்டன் சச்சின் புகழாரம் தினகரன்

அசாமில் முதல் கட்ட தேர்தல்: தினத் தந்தி 

இந்திய-நேபாள எல்லையில் பூகம்பம்-டெல்லியில் நில அதிர்வு தட்ஸ்தமிழ்

ஆ.ராசா விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை:நீரா ராடியா தினமணி

இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைக்க யமஹா திட்டம்  தட்ஸ்தமிழ் 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை  தினத் தந்தி

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு ஆறாம்திணை

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

456 - சென் பாட்ரிக் அயர்லாந்துக்கு மத தூதராக வந்தார்.

1614 - வேர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடியினளான போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.

1654 - ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.

1792 - அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1879 - பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.

1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாண்டன.

1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.

1946 - 11 மாதங்கள் ஆக்கிரம்பீன் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகினர்.

1955 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.

1956 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.

1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.

1957 - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1976 - மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

1998 - அக்காஷி-கைக்கியோ பாலம், உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்

1929 - Ivar Giaever, நோபல் பரிசு பெற்ற நோர்வே இயற்பியலாளர்

1933 - க.கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (இ. 1982)

இறப்புகள்

1967 - ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1890)

1992 - சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனம் வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918

2005 - சோல் பெலோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் ([பி. 1915)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

Migalmeval meipppruL kANAr igal-meval  

In-nA arivi navar

The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.

பொருள்

Meaning

மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

இன்றைய பொன்மொழி

     ஆசையை அகற்று அப்போது நீ தூய பொருளாக அமைந்து விடுவாய்

இன்றைய சொல்(Today's Word)

ஓசனை (பெ)

VOsanai

பொருள்

Meaning

1.        நான்கு காத தூரம்  

A measure of distance  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: