குறளும் பொருளும் - 1046 பொருட்பால் – குடியியல் –நல்குரவு நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். Translation: Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away. பொருள்:நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும். Explanation: The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression. உங்களுக்குத் தெரியுமா? நூற்றாண்டு காணும் தில்லி மாநகரத்திற்கும், மக்களுக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள்.(நன்றி: விக்கிபீடியா) தில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த டில்லு அல்லது டிலு எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் தாவா என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் தளர்வு என்னும் பொருள்படும் டிலி என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து தில்லி என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லது தெஹாலி என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் தில்லிக்கா என்பது வேறு சிலருடைய கருத்து. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) தமிழா! தமிழா !! இச்சங்கம் நாளை உன்னாலே... நம்மைச் சுற்றி... Ayappa Padi Pooja & Bhajans Vaidhika Sthapanam will be held on Saturday December 17th 2011 at Community Hall, Sector-11, Near Modern School, Noida. Contact Sankara Sastrigal – 9810727499 Vaishali Ayyappa Sewa Samiti invites you to Ayappa Puja / Sastha Preethi and Mskaravilakku on Sunday 18-12-2011 & 15-1-2012. Contact V.Senthil - 9818197640 உதயம்.இன் வழங்கும் "மார்கழி உதயம் கோலப்போட்டிகள்" உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும். Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment