Thursday, November 24, 2011

Fwd: நன்றி தெரிவிக்கும் நாள்.

நண்பர் இரா.பாலகிருட்டிணன் அவர்கள்  நன்றி நவிலும் நாளுக்காக எழுதிய கவிதை வரிகள் உங்களுக்காக...
இன்று நன்றி நவிலும் நாள்.

மூலமுதல்வனுக்கு முதற்கண் நன்றி.
யானைமுகற்கு என்றும் நன்றி.
யாவர்க்கும் நன்றி எனை ஈன்றாளுக்கு நன்றி.
லிங்கன் ஆரம்பித்து வைத்தான்.
லிங்கேசனுக்கு நன்றி.
கதிரோனுக்கு நன்றி.
கந்தன் கடம்பனுக்கு நன்றி.
வானுக்குநன்றி வளர்மதிக்குநன்றி.
மாரிக்குநன்றி யுனைமறவாமைக்கு நன்றி
உண்ட உணவுக்கும் நன்றி.
ஊன் பொதி உடம்புக்கும் நன்றி
உலகின் ஆருயிர்கட்கு நன்றி
உயிர்சார் உணர்வுக்கும் நன்றி
மண்ணுகும் மலைகளுக்கும் நன்றி.
கானுக்கும் கடலுக்கும் நன்றி.
பெற்ற தாய் தந்தைக்கு நன்றி மற்றும்
உற்றா ருறவினர்க்கும் நன்றி.
கற்ற கல்விக்கும் கற்பித்த குருவுக்கும் நன்றி.
நட்புக்கு நன்றி.நல்லோர் யாவருக்கும் நன்றி.
மாண்ட மனைவிக்கும் மக்களுக்கும் நன்றி.
ஈசனுக்கு நன்றி எம்பெருமாளுக்கு நன்றி.
இடுக்கண் தீர்த்தெமை யாளுமிறைவிக்கு நன்றி
இமைப்போது மென்நெஞ்சம் நீங்காதாளுக்கு நன்றியோ நன்றி!


கடைசிவரி தந்த மணிவாசகனுக்கும் நன்றி.
எனது போரடிக்கும் அனைத்து மெயில்களையும் படிக்கும்
அன்பு நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி! மீண்டும் நன்றி !!


அன்பன்
இரா.பாலகிருட்டிணன்.


No comments: