Friday, June 24, 2011

Daily news letter 24-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௧ய (8) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

லோக்பால் மசோதாவுக்காக குண்டுகளை எதிர்கொள்ளத் தயார்: அண்ணா ஹசாரே

தினமணி 

புதிய உள்துறை செயலர் ஆர்.கே. சிங்

தினமணி 

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி பலியானவரின் குடும்பத்திற்கு ரூ ...

தினத் தந்தி 

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது

தினத் தந்தி 

கறுப்புபணத்தை ஒழிக்க இ-மெயில் வாயிலாக யோசனை

தினமலர் 

வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் முடிவு

தினமலர் 

அரசு கேபிள் டி.வி. தொடங்க தீவிர ஏற்பாடுகள்

நக்கீரன் 

23 மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை துணைத் தூதரகம்

தினமணி 

சாய்பாபா டிரஸ்டுக்கு ஆந்திர போலீஸ் நோட்டீஸ்

தினமலர் 

67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு விசா பாகிஸ்தான் வழங்கியது

தினத் தந்தி 

மீண்டும் ரூ 17 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்!

தட்ஸ்தமிழ் 

ஆப்கான் போர் ரகசியங்களை வெளியிட்டது கனடா

௯டல் 

சமையல் கியாஸ் விலை ரூ.25 உயரும்

தினத் தந்தி 

இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்: இந்திய அணி 2-ந்தேதி தேர்வு

தினத் தந்தி 

முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

வெப்துனியா 

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

தினத் தந்தி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1314 - ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.

1340 - நூறாண்டுகள் போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.

1509 - எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1571 - மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

1597 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.

1662 - மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.

1664 - நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.

1812 - ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.

1849 - அமெரிக்கப் பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை 1849 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.

1859 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.

1860 - புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

1894 - பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.

1932 - சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.

1938 - 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.

1940 - பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1963 - சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.

1975 - அமெரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

1983 - அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.

2004 - நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்படட்து.

2007 - கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1883 - விக்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1964)

1915 - ஃபிரெட் ஹாயில், அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்ந்த வானியல் அறிவியலாளர் (இ. 2001)

1921 - கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)

1928 - எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்திய இசையமைப்பாளர்

1938 - நீல. பத்மநாபன், எழுத்தாளர்

இறப்புகள்

1908 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பி. 1837)

2006 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.19

வரைவின் மகளிர்  

 

 

(varaivin makaLir)

 

2.3.19

HARLOTS

(Women outside the virtue of family bonds)

குறள் எண்  914

பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று.

Pazakiya porutpeNdir poymai muyakkam iruttaர்aiyil

aethil piNamthazeei atRRu.

As one in darkened room, some stranger corpse inarms,

Is he who seeks delight in mercenary women's charms!.

பொருள்

Meaning

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

இன்றைய பொன்மொழி

எல்லோரும் ஆசானாக இருக்க முடியாது.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: