Saturday, May 7, 2011

Daily news letter 7-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ரத்த  தானம் உங்கள் சொந்த நலனிற்காக கூட நீங்கள்  செய்யாலாம் . எப்படி என்றால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம்.மேலும், அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பிஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், மலேரியா- இவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று காசு வாங்காமலேயே சோதனை செய்து சொல்கிறார்கள்  எனவே, தானத்தின் உயரிய பலன் மட்டுமன்றி, உங்கள் உங்கள் பற்றிய சோதனைகளும் கூடவே செய்யப்பட்டு உங்கள் நலன் காக்க உதவும் தானம் ரத்த தானம்.

Plase come foirward and register your details   as a Blood Donor with avvaitamilsangam@gmail.com  ( Name, City, Contact number and blood group). Those who have aleady registered need not have to send it again. Please pass it to your friends and relatives to add them as donors.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௨௪   (24) , சனி  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ஏர்இந்திய பைலட்டுகள் ஸ்டிரைக் வாபஸ்

கருணாநிதி வழங்கிய 3 கோடி ரூபா தினக்குரல்

கனிமொழி சார்பில் ஜேட்மலானி ஆஜர்: பாஜக கருத்து தினமணி 

அட்சய திருதியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை தினமணி

பின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் கேட்ட கசாப் தட்ஸ்தமிழ்

இந்த சீசனுடன் ஐ.பி.எல். போட்டியில் இருந்து வார்னே ஓய்வு தினத் தந்தி

சோமாலிய கடற் கொள்ளையர்களை இந்திய கடற்படை விரட்டியடித்தது தினகரன்

பின்லேடன் எழுதிய 4 பக்க உயில் நக்கீரன்

கராச்சியிலிருந்து தாவூத் தப்பி ஓட்டம் வெப்துனியா

கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப் வெப்துனியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

 

1697 - சுவீடனில் ஸ்டொக்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது.

1895 - ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1920 - போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் க்கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் செம்படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.

1920 - சோவியத் ரஷ்யா ஜோர்ஜியாவை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.

1927 - நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோட்ல் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார்.

1946 - சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1948 - ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது.

1952 - ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.

1954 - வியட்நாமில் "தியன் பியன் பு" (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

1992 - நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1999 - கினி-பிசாவுநாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பெர்னார்டோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2007 - ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

2007 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2007 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.

பிறப்புக்கள்

1840 - பியோத்தர் த்சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (இ. 1893)

1861 - இரவீந்திரநாத் தாகூர், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)

இறப்புகள்

1539 - குரு நானக், சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர் (பி. 1469)

1825 - அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையறிஞர் (பி. 1750)

1998 - அலன் கோர்மாக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1924);

சிறப்பு நாள்

ரஷ்யா, பல்கேரியா - வானொலி நாள்

நோர்வே - தேசிய நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.15

பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal)

 

2.3.15

 

Appraising enemy's skills

Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes

குறள் எண்  874

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
.

pagainatpAk kOndOzhugum paNbudaiyALan

thagaimaikkaN thanginRu ulagu.

The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

பொருள்

Meaning

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.

.

The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

 

இன்றைய பொன்மொழி

முதலாவது செல்வமும், முதன்மையான செல்வமும் உடல்நலம்தான்   

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: