Monday, May 30, 2011

Daily news letter 30-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (16) , திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

  • சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட டொயோடா உற்பத்தி முறைமை உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

இன்று எம்.எல்.ஏவாக கருணாநிதி, துரைமுருகன் பதவியேற்பு

தட்ஸ்தமிழ் 

கர்நாடக பா.ஜ., அரசியலைக் கலக்கும் ரெட்டி சகோதரர்கள்

தினமலர் 

தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாக். கைவிட வேண்டும் : பிரதமர் மன்மோகன்!

தினகரன் 

பாதுகாப்பாக இருக்கின்றன அணு ஆயுதங்களை தலீபான்களால் கைப்பற்ற ...

தினத் தந்தி 

கொல்கத்தா-ஹாஸ்டலின் 4வது மாடியிலிருந்து குதித்து தட்ஸ்தமிழ் 

ஹெட்லி பேச்சிற்கு கிலானி மறுப்பு

தினமலர் 

கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா : இன்று விசாரணை

தினமலர் 

சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரஜினி!

தினகரன் 

மே.வங்காளத்தில் சட்டமன்ற விடுதியின் மாடியில் இருந்து குதித்து ...

தினத் தந்தி 

கேரளாவில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

தினத் தந்தி 

ஊக்கமருந்து சோதனையில் தரங்கா சிக்கினார்?

தினத் தந்தி 

கச்சா எண்ணெய் விலை குறைந்தது

தினமலர் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.

1635 - முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.

1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.

1966 - முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1987 - கோவா தனி மாநிலமாகியது.

2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1899 - மணிக்கொடி சீனிவாசன், தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர் (இ. 1975)

1931 - சுந்தர ராமசாமி, நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் (இ. 2005)

1934 - அலெக்சி லியோனொவ், சோவியத்/ரஷ்யாவின் விண்வெளி வீரர்

இறப்புகள்

1431 - ஜோன் ஆஃப் ஆர்க், பிரெஞ்சு வீராங்கனை (பி. 1412)

1960 - போரிஸ் பாஸ்ரர்நாக், ரஷ்ய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)

1981 - சியாவுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1936)

சிறப்பு நாள்

திரினிடாட் டொபாகோ - இந்தியர்களின் வருகை நாள் (1845)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.17

பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai)

 

2.3.17

 

Offend Not the Great

குறள் எண்  892

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

periyaRai paeNathu ozukiR periyaRArAl

paerA idumpai tharum.

If men will lead their lives reckless of great men's will,

Such life, through great men's powers, will bring perpetual ill.

பொருள்

Meaning

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

இன்றைய பொன்மொழி

யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: