துவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா 30/4 & 1/5 – 2011
இடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம் ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)
30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி
1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி
மேலும் விவரங்களுக்கு :
சுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் - 9868230055, ஜெய்சங்கர் 9810116465
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௧ ௬ (15) , வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் அவற்றுக்குத் தங்கத்தட்டில் வைத்தே உணவு வழங்கப்படும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ஸ்பெக்ட்ரம் பிரச்னையை சட்டப்படி சந்திப்போம்: தி.மு.க., முடிவு தினமலர் | இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா முன்வரவேண்டும் தினமணி | |||||||||||||||
3வது கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் 78.3% வாக்குப் பதிவுதினமணி | சாய்பாபா உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடந்தது தினத் தந்தி | |||||||||||||||
விமானிகள் வேலை நிறுத்தத்தால் 46 விமானங்கள் ரத்து தினத் தந்தி | ||||||||||||||||
அவதூறு பரப்பும் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்தினகரன் | சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி புனே அணியை மீண்டும் சாய்த்தது தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1792 - பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது. 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான். 1876 - இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. 1920 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1952 - இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. 1965 - டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர். 1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது. 2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது. 2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார். பிறப்புகள் 1758 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (இ. 1831) 1937 - சதாம் உசேன் - ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் (இ. 2006) இறப்புகள் 1942 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855) 1945 - முசோலினி, இத்தாலிய நாட்டு சர்வாதிகாரி (பி. 1883) 1999 - ஆர்தர் சவ்லோவ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 868 | ||||||||||||||||
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு | ||||||||||||||||
kuNanilanAyk kutRAm palavAyin mAtRa-rkku inanilanAm YemAp pudaiththu | ||||||||||||||||
No gracious gifts he owns, faults many cloud his fame; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். | He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
உனக்கு தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக்கொண்டு, தெரியாததைத் தெரியாதென உணர்தல் அறிவு | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment