அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 11 வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.thevaaram.org/ta/index.php | ||||||||||||||||
பன்னிரு திருமுறை - பாட்டும் பொருளும். சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர். இப் பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது. | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
திருச்சியில், ஒரே நாளில் கருணாநிதி-ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் | ||||||||||||||||
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது மியான்மரை உலுக்கிய பூமி அதிர்ச்சி | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1584 - வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார். 1634 - மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர். 1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார். 1807 - அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. 1857 - பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். 1918 - பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. 1953 - ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். 1954 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000). 1957 - மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது. 1965 - மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார். 1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர். 1992 - சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார். பிறப்புக்கள் 1914 - நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009) இறப்புக்கள் 1914 - பிரெடெரிக் மிஸ்ட்ரால், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1830) சிறப்பு நாள் கிரேக்கம் - விடுதலை நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.12 | புல்லறிவாண்மை (pullaRivANmai) |
2.3.12 |
PETTY CONCEIT | |||||||||||||
Lack of Wisdom,Dunce, Smallness petty conceit | ||||||||||||||||
குறள் எண் 848 | ||||||||||||||||
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் | ||||||||||||||||
Aevavum seikalAn thAntheRAn avvuyir pO-om alavumOr nOi | ||||||||||||||||
Advised, he heeds not; of himself knows nothing wise; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே. | The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
விழிப்பதற்கே உறக்கம் ; வெல்வதற்கே தோல்வி;எழுவதற்கே வீழ்ச்சி; | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒன்றலர் | vonralar | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. பகைவர் |
1. ememies
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Friday, March 25, 2011
Daily news letter 25-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment