இந்தியாவின் "எடிசன்" என அழைக்கப்படக்கூடிய அளவிற்கு வியக்கத்தகு கண்டுபிடிப்புக்கள் செய்த திரு ஜி.டி. நாயுடு அவர்கள் பிறந்த தினம். கோவை மாநகர் பகுதியில் வாழ்ந்த அனைவரும் இவரது புகழ் அறிவர். இத்தகைய மேதையைப் பற்றி பாட நூல்களில் ஏதும் குறிப்பிடாமல் இருப்பது மிக்க வருத்தம் தரக்கூடிய ஒன்று. இந்தியாவின் கண்டுபிடிப்புக்கள் இந்திய மண்ணிலேயே தயாரிக்கப்படவேண்டும் எனும் இவரது பிடிவாதக் கொள்கையால் இவரின் பல கண்டுபிடுப்புக்கள் உபயோகத்திற்கு வரவில்லை. இவர் தன் கண்டுபிடிப்புகளை வேறு நாட்டிற்கு விற்கவும் இல்லை.
ஓவ்வொரு தமிழரும் பெருமைப்படவேண்டிய அளவிற்கு புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புக்களை செய்தவர்.
உங்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து இவரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த வலைதள முகவரி உங்களுக்கு உதவும். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
உங்கள் கருத்தை தயவு செய்து கண்டிப்பாக எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்கவும் . உங்கள் சந்ததியினருக்கு இவரைப் பற்றி கூறவும்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 9 புதன், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://eluthu.com/ | ||||||||||||||||
எழுத்து.காம் - சஞ்சுவின் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த எண்ணங்கள் கவிதைகளாய் ...... | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
இந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சில் ஏறிய மொழி தமிழ் மொழி ஆகும். அச்சடிக்கப்பட்ட நூல் விவிலியம். | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
பாராளுமன்றத்தில் வெளிநடப்பு: பிரதமர் மீதான உரிமைப்பிரச்சினை ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1752 - கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது. 1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். 1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். 1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். 1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது. 1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது. 1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. பிறப்புக்கள் 1858 - லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941) 1881 - ரொஜர் டூ கார்ட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1958) 1881 - ஹேர்மன் ஸ்டீடிஞ்சர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965) 1893 - ஜி. டி. நாயுடு, தமிழக விவசாய அறிவியலாளர் 1907 - டானியல் போவெட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992) 1910 - அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் (இ. 1998) 1916 - ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (இ. 2008) 1973 - ஜேசன் கிட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புக்கள் 1931 - பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் (பி. 1907) 1964 - யோக சுவாமிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தர் (பி. 1872) 1992 - பிரீடெரிக் ஹயெக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899) சிறப்பு நாள் உலக வானிலை நாள் பாகிஸ்தான் - குடியரசு நாள் (1956) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.12 | புல்லறிவாண்மை (pullaRivANmai) |
2.3.12 |
PETTY CONCEIT | |||||||||||||
Lack of Wisdom,Dunce, Smallness petty conceit | ||||||||||||||||
குறள் எண் 846 | ||||||||||||||||
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் | ||||||||||||||||
atRRam maRaith-thalO pullaRivu thamvayin kutRam maRaiyA vazhi | ||||||||||||||||
Fools are they who their nakedness conceal, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். | Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
சமயம் இல்லா மனிதன் கடிவாளம் இல்லா குதிரை போன்றவன் | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒறுவுகலம் | oRivukalam | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. விளிம்பு சிதைந்த பானை |
1. pot chipped along its mouth
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment