அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 02 வியாழன், கார்த்திகை–16, ஜீல்ஹேஜ் – 25 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
39 மந்திரிகள் பதவி ஏற்பு ஜெகன்மோகன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு | |||||||||||
ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊகத்தின் அடிப்படையிலானது: ராசா | |||||||||||
ஆன்-லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் ... | |||||||||||
பிஎஸ்என்எல் எஸ்டிடி முறை ரத்து : நாடு முழுவதும் லோக்கல் கட்டணம் | வேலூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. கிருமி பாதிப்பு ... | ||||||||||
2வது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் ஜெயித்தது இந்தியா கம்பீர் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1942 | மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது. | ||||||||||
1946 | பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது. | ||||||||||
1954 | சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது. | ||||||||||
1971 | அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது. | ||||||||||
1971 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது. | ||||||||||
1975 | பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார். | ||||||||||
1976 | பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார். | ||||||||||
1988 | பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். | ||||||||||
1993 | ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||||||||||
2006 | பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1910 | ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1911 | பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867) பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். | ||||||||||
1933 | ஜி. கிட்டப்பா, நாடக நடிகர் கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். தனது 8வது வயதில் சிலோனில் நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டி தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. | ||||||||||
2008 | மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933) மு. கு. ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933 - டிசம்பர் 2, 2008) ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். 1989 ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூல். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.4 | படை மாட்சி(padai mAtchi) | 2.3.4 | Glory of Defence | ||||||||
Character and valour of the personnel and the importance of discipline and coherence. | |||||||||||
762 | உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. | ||||||||||
Ulaividaththu uuRanjssA vankaN tholaividaththuth tholpadaik kallAl arithu. | |||||||||||
In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது. | Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மண்பாண்டத்தையும் பொன் கிண்ணமாகப் போற்றி மகிழ்பவனே சிறந்தவன் | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயுறவு (பெ) | AiyuRavu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. சந்தேகம், ஐயம் (san-thekam, aiyam) | 1. Doubt, suspicion | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment