Thursday, October 28, 2010

Daily news letter 28-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 28 புதன்,  ஐப்பசி –11,  ஜில்ஹாயிதா – 19

Poll: are you interested in a housing project in Noida / Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010..

Please send your feedback and suggestions to avvaitamilsangam@gmail.com.

முக்கிய செய்திகள் – Top Stories

கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி

கர்நாடக மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் 2-வது நாளாக சோதனை ...

ஐ.நா.நிபுணர்கள் குழு இலங்கை தொடர்பில் புலனாய்வை மேற்கொள்ளாது

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்தது: 28 பேர் பலி

கர்நாடக அரசு கைவிரிப்பு

மலேசியாவுடன் ராணுவ ஒப்பந்தம்: மன்மோகன் முன்னிலையில் கையெழுத்து

ஜெயலலிதாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் ...

தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க தனி சட்டம்:முதல்வர்

ஹூண்டாய், நெய்வேலி தொழிலாளர் பிரச்சினைகள்: கருணாநிதியுடன் ...

தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாறும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இளங்கோவன் பேச்சு பற்றி எனக்கு கவலை இல்லை தங்கபாலு தகவல்

மும்பையில் கொடுமை-பெற்ற பிள்ளையை ஜன்னல் வழியாக வீசிக் கொன்ற தாய்

நூதன முறையில் நவரத்தினம், வைரம் கடத்திய இலங்கை நபர் கைது

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க ஆட்டத்தில் ...

நவம்பர் 1 முதல் செல்பேசி எண் தொடர வசதி!

ரெய்னா மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது- தோனி

இங்கிலாந்து கால்பந்து கிளப்பை இந்திய நிறுவனம் வாங்குகிறது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

312

முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.

1492

ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.

1886

நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.

1922

முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

1942

கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

1948

சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.

1971

ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) "புரொஸ்பெரோ" என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.

1972

முதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.

1985

மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

2001

கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.

பிறப்புக்கள்

1955

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

இறப்புகள்

1627

ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.1

நாடு (Naadu)

2.3.1

The Land

736

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

palkuzuvum pAzseiyum utpagaiyum Ven-thalaikkum

kolkuRumpum illatha n-Adu

From factions free, and desolating civil strife, and band
Of lurking murderers that king afflict, that is the 'land'.

பொருள்

Meaning

பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.

A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.

இன்றைய பொன்மொழி

ஒருவன் சிரிக்கும் போதெல்லாம் மரணம் தள்ளிப்போடப்படுகிறது.

இன்றைய சொல்

Today's Word

ஐககண்டியம் (பெ.)

aikakaNdiyam

பொருள்

Meaning

1.       கருத்தொற்றுமை

(karuththotRumai)

1.     Consensus of opinion

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: