Wednesday, May 5, 2010

Daily news letter 05-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 05,  சித்திரை – 22,  ஜமாதில் ஆவ்வல் – 19

முக்கிய செய்திகள்

மும்பையை ஸ்தம்பிக்க வைத்த ரெயில் டிரைவர்கள் ஸ்டிரைக் வாபஸ்

கசாபுக்கு தூக்கு தண்டனை: அரசு வழக்கறிஞர் வாதம் 

நியூயார்க் கார் குண்டு சம்பவத்தில் பாகிஸ்தானியர் கைது

சென்னையில் 3 மாதத்தில் மினி பஸ்கள் இயக்கப்படும்

ஐ.நா.மாநாட்டில் அமெரிக்கா-ஈரான் மோதல் 

ஹாலப்பா தலைமறைவு 

ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் : போலீஸ் உஷார் 

கேதன் தேசாயால் நம்பகத்தன்மை போய்விட்டது: குலாம் நபி ஒப்புதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்-8 சுற்றில் நியூசிலாந்து ...

சென்னை துறைமுகத்துக்கு பிரான்சு போர் கப்பல் வருகை 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1762

ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.

1916

டொமினிக்கன் குடியரசை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.

1925

தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது.

1936

எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.

1950

தாய்லாந்தின் ஒன்பதாவது ராமா மன்னராக பூமிபால் அடுள்யாடெ முடி சூடினார்.

பிறப்புக்கள்

1818

 கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (இ. 1883)

1916

 பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)

பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

1916

 ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1994))

கியானி ஜெயில் சிங் 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீர்ராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் என பல தளங்களில் செயல்பட்டவர்.

1922

 டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை

டி.ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 - செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.

றப்புகள்

1821

 நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (பி. 1769)

1948

 புதுமைப்பித்தன், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி (பி. 1906)

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம், தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள்.

1957

 ஆர். மகாதேவன் (தேவன்), நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)

தேவன் அல்லது ஆர். மகாதேவன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

muyaRchi tiruvinai aakkum muyaRRinmai

inmai pukuththi vidum.

Effort brings fortune's sure increase,

Its absence brings to nothingness.

பொருள்

Meaning

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

Labour will produce wealth; idleness will bring poverty.

இன்றைய பொன்மொழி

மனிதனுடைய அடிப்படையான நல்ல பண்பு, நன்மை செய்வதே ஆகும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏசறவு(பெ.)

EsaRavu

பொருள்

Meaning

1.     விழைவு, விருப்பம் (vizaivu, viruppam)

2.     புகழ்ச்சி (pukazchchi)

1.     Desire, longing

2.     Praise, adoration

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: