Tuesday, December 15, 2009

உடல் உறுப்பு தானம் - இலச்சினைப் போட்டி ( logo)

உடல் உறுப்பு தானம் -  இலச்சினைப் போட்டி ( logo)
 
வரும் ஜனவரி 23-26, 2010  இல் அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம் "உடல் உறுப்பு தானம்" பற்றிய விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் வளர்க்க, நொய்டாவில் உள்ள கிரேட் இந்திய பிளேஸ் என்ற வர்த்தகக்  கூடத்தில் (mall)  விழா எடுக்க உள்ளது.
 
இவ்விழாவில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு இலச்சினை நம் சங்க உறுப்பினர்கள் மூலமாக தீட்ட எண்ணி இவ்வேண்டுகோளை உங்களுக்கு சமர்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி  அடைகிறோம்.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட இலச்சினை இவ்விழாவில் எவ்வொரு இடத்திலும் இடம்பெறும்.  இவ்விலச்சினையை   தீட்டியோர் விவரம் இவ்விழாவில் அறிவிக்கப்படும். 
 
இலச்சினையின் பொருள்.
1. உடல் உறுப்பு தானம் வழங்குங்கள்
2. உயிர் தமிழை வளர்க்கட்டும்.  உடல் பிறர்க்கு உதவட்டும். 
3.  நமக்குப்பின் பலர் நம்மால் பயன் பெறட்டும்.
 
உங்கள் இலச்சினைகளை வரும்   31-12-2009  க்குள் எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
 
நன்றிகளுடன்,
கிருஷ்ணமாச்சாரி,
செயலாளர்,
அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம்,
நொய்டா   

No comments: