Sunday, October 25, 2009

Daily news letter 25-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 25, ஐப்பசி – 8, ஜில்ஹாயிதா – 6

 

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1924 - இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

1971 - ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

2001 - இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

2007 - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.

பிறப்பு

1881 - பாப்லோ பிக்காசோ, ஸ்பானிய ஓவியர், சிற்பி (இ. 1973)

இன்று:

விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP), என்பது வீடுகளில் உள்ள மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது துய்ப்பறிவு அல்லது பட்டறிவு* என்னும் பொருள் படும் Experience என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என விண்டோஸ் எண்டி கருனியில் (கேர்ணலில், kernal) இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாக உள்ளது. இப்பதிப்பானது அக்டோபர் 25, 2001 வெளிவிடப்பட்டது. ஜனவரி 2006 IDC சேவையின் படி 400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை இயக்குகின்றன. விண்டோஸ் எக்ஸ்பியைப் பின்பற்றியே விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் உருவாக்கப்பட்டது.

 

பாப்லோ பிக்காசோ (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்

 

இயற்பெயர்: பாப்லோ டியேகோ ஓசே பிரான்சிசுக்கோஒ டி பௌலா உவான் நெப்போமுசெனோ மரியா டி லோசு ரெமெடியோசு சிப்பிரியானோ டி ல சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீசு இ பிக்காசோ

(Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso)

துறை: நிறச்சாந்து ஓவியம், ஓவியம், சிலை, அச்சாக்கம், செராமிக்ஃசு

பயிற்சி: Jose Ruíz (father), Academy of Arts, Madrid

படைப்புகள்: Les Demoiselles d'Avignon (1907), Guernica (1937) The Weeping Woman (1937).

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

444

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.

thammiR periyAr thamarA ozukuthal

vanmaiyu LellAn-th thalai.

To live with men of greatness that their own excels,

As cherished friends, is greatest power that with a monarch dwells.

பொருள்

Meaning

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.

இன்றைய பழமொழி

Today's Proverb

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது

ettuch churaikkAi kootukku uthavAthu

A picture of a vegetable can't be used in a kottu ('koottu' is a sort of stew made with vegetables and lentils) (literal)

Meaning

A recipe is not the dish. Bookish knowledge is no match for real experience.

இன்றைய சொல்

Today's Word

பட்டறிவு பெ.

pattaRivu

பொருள்

Meaning

1.  நேரடியான அனுபவத்தால் பெற்ற அறிவு

1.  Knowledge gained by experience.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: