Friday, October 30, 2009

Daily news letter 30-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 30, ஐப்பசி – 13, ஜில்ஹாயிதா – 11

 

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.

1947 - உலக வர்த்தக மையத்தில் அடித்தளமான கேட் நிறுவனம் துவங்கப்பட்டது.

1973 - ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1985 - சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

பிறப்புக்கள்

1821 - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)

1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)

1909 - ஹோமி பாபா, இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)

இறப்புகள்

1910 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)

1963 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

1973 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

முத்தூராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கம். தலை சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது.

 

ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு (சனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973) இந்திய அரசியல்வாதி. விடுதலைப் போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு 1957 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962 இல் ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மும்முறை வெற்றி பெற்றார். 15 ஆண்டுகள் சட்டப்பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தார் ரா.கி. சொந்த வாகனம் அவருக்கென்று ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாக பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுபணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்கையின் முக்கியமான செய்தி காந்தியடிகளின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார்.

வினோபாவின் பூமி தான கொள்கைகாக ஏழை அரிசனங்களுக்கு தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கினார்.

 

இந்திய அணுசக்தியின் சிற்பி ஹோமி ஜஹாங்கீர் பாபா(அக்டோபர் 30, 1909 – சனவரி 24, 1966). குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது. எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.

1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.

31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.

இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' ( Bhabha Atomic Research Centre ) எனப் பெயரிடப்பட்டது.

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

muthalilArk uuthiya millai mathalaiyAnj

sAr pilArk killai n-ilai.

Who owns no principal, can have no gain of usury;

Who lacks support of friends, knows no stability.

பொருள்

Meaning

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

இன்றைய பழமொழி

Today's Proverb

ஆறெல்லாம் பாலாய்ப்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

aarellaam pAlAi pOnAlum n-Ai n-akkiththAn kudikkum.

Even if a river flows with milk, a dog can take in only one lick at a time (literal)

Meaning

What one learns is limited by ones capacity to understand.

இன்றைய சொல்

Today's Word

எண்ணிலார்  பெ.

eNNilar

பொருள்

Meaning

1.  பெரும் எண்ணிக்கையிலானோர் (perum eNNikkaiyilAnOr)

2.  பகைவர் (pakaivar)

1.  Innumerable people.

2.  Enemies, foes.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: