Thursday, October 22, 2009

Daily news letter 22-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 22, ஐப்பசி – 5, ஜில்ஹாயிதா – 3

 

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

794 - கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ) மாற்றினார்.

1877 - ஸ்கொட்லாந்தில் பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.

1878 - செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைப்பெற்றது.

1924 - பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1949 - சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

2001 - PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பிறப்பு:1828 - ஜான்சிராணி லட்சுமிபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858)

இறப்பு:1925 - அ. மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)

இன்றைய சிறப்பு மனிதர்:

 

அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.

தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.

சுவையான செய்திகள்

1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார்.

லட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 – ஜூன் 17, 1858), வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

இவரது வீரதீரச் செயல்கள், மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போர் போன்றவை இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக இன்றும் அவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார்.

வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்.

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.

aRanaRin-thu mUththa aRivudaiyAr kaeNmai

thiRanaRin-thu thaern-thu koLal.

As friends the men who virtue know, and riper wisdom share,

Their worth weighed well, the king should choose with care.

பொருள்

Meaning

அறமுணர்ந்த மூதறிஞர்களின்* நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

இன்றைய பழமொழி

Today's Proverb

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்.

vEttai kattipAr,kalyANathai paNNippar.

Build a home, organize a wedding (literal)

Meaning

If you think daily life is painful, try building a home or organizing a wedding. These activities involve bringing a lot of people together and can never be done in a day, and hence expose a person to the complexities of project and people management.

இன்றைய சொல்

Today's Word

மூதறிஞர் பெ.

mUthaRingar

பொருள்

Meaning

1.  வயது நிரம்பிய அறிஞர்

(vayathu n-irampiya aRingar)

1.  Elderly men of ripe wisdom.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: