. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
அக்டோபர் – 19, ஐப்பசி – 2, ஷவ்வால் – 29 | ||||
| ||||
Today in History | ||||
1216 - இங்கிலாந்தின் ஜோன் மன்னன் இறக்க, அவனது ஒன்பது வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான். 1453 - பிரெஞ்சு போர்டோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது. 1943- காச நோய்க்கான Streptomycin என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. 1976 - சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. பிறப்பு: 1910 - சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் விருது பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1995) இறப்பு: 2006 - ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953) | ||||
இன்றைய சிறப்பு மனிதர் | ||||
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) (அக்டோபர் 19, 1910 - ஆகஸ்ட் 21, 1995) வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர் விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. விருதுகள் Fellow of the Royal Society (1944) Henry Norris Russell Lectureship (1949) Bruce Medal (1952) Gold Medal of the Royal Astronomical Society (1953) National Medal of Science award by President Lyndon Johnson (1967) Henry Draper Medal (1971) Nobel Prize in Physics (1983) Copley Medal, the highest honour, of the Royal Society (1984) வாழ்க்கைக் குறிப்பு அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1928-ல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கெனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார். அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் 19வது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே மேலும் இரு கட்டுரைகளும் பதிப்பாயின. 19377 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகனாவார். | ||||
| ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.6 | குற்றங்கடிதல் | 2.1.6 | Avoiding faults | |
438 | பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. patRRuLLam ennum ivaRanmai etRRuLLum eNNap paduvathOn RanRu. The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all. | |||
பொருள் | Meaning | |||
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான். | Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all). | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது moorthy chinnathAnAlum keerthi periyathu | The idol may be small, its fame is big. | |||
Meaning | ||||
Don't judge the worth of a person by their size. Size does not matter. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எண்கு பெ. | engu | |||
பொருள் | Meaning | |||
1. கரடி(karadi) | 1. Bear | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment