Wednesday, October 21, 2009

Daily news letter 21-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 21, ஐப்பசி – 4, ஜில்ஹாயிதா – 2

 

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1520 - பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.

1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.

1945 - பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

பிறப்பு:1925 - சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி

இறப்பு:1835 - முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1776)

இன்றைய சிறப்பு மனிதர்:

 

முத்துசுவாமி தீட்சிதர் (மார்ச் 24, 1776 - அக்டோபர் 21, 1835) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.

முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார்.

இவருடைய முதல் கிருதி* மாயாமாளவகௌளையில் "சிறீ நாதாதி குருகுஹோ ஜயதி" என்பதாகும். தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைக் கையாண்டார். இவரது கிருதிகள் நாளிகேர ரஸத்திற்கு ஒப்பானவை.

தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.

குகன் திருவருளால் அழியப்புகழ் பெற்றுள்ள தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சிஷ்யர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாட பாடக் கேட்டுக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. தற்சமயம் இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

440

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

kAthala kAthal aRiyAmai uykkiRpin

aethila aethilAr n-Ul.

If, to your foes unknown, you cherish what you love,

Counsels of men who wish you harm will harmless prove.

பொருள்

Meaning

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

இன்றைய பழமொழி

Today's Proverb

வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்

veRum kai enbathu moodathanam,un viralgaL pathum mooladhanam.

There is nothing called empty hands. You always have 10 fingers in it

Meaning

Your effort is what all you have got.

இன்றைய சொல்

Today's Word

கிருதி பெ.

kiruthi

பொருள்

Meaning

1.  (இசை) இராகத்தை பெரிதும் சார்ந்துள்ள இசைவடிவம், கீர்த்தனம்

(isaivadivam, kiirththanam)

1.  Musical composition depending on the form of a raga set to a particular tune.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: