. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
அக்டோபர் - 16, புரட்டாசி - 30, ஷவ்வால் – 26 | ||||
அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்று: உலக உணவு நாள் (World Food Day), ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. World Food Day 2009 theme: "Achieving food security in times of crisis" | ||||
Today in History | ||||
1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான். 1905 - இந்தியாவில் வங்காள பிரிவை ஏற்பட்டது 1923 - வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது. 1973 - ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர். 2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் சிரின் எபாடி பற்றி முதல் கட்டுரை எழுதப்பட்டது இறப்புகள் 1799 - கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760) 1951 - லியாகட் அலி கான், பாகிஸ்தானின் அரசியல்வாதியும், விடுதலையடைந்த பாகிஸ்தானின் முதலாவது பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். (பி. 1896) சிறப்பு நாள்: உலக உணவு நாள் | ||||
இன்றைய சிறப்பு மனிதர்: | ||||
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். ஆட்சிக்காலம் - கி.பி 1790- கி.பி 1799 (பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரர்) அரச வம்சம் - நாயக்க மன்னர் தந்தை - ஜெகவிர கட்டபொம்மன் வாழ்க்கை பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார். போர் அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான்.அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை 1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், சக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. | ||||
| ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.6 | குற்றங்கடிதல் | 2.1.6 | Avoiding faults | |
437 | செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். seyaRpAla seyyA thivaRiyAn selvam uyaRpAla thanRik kedum. Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind. | |||
பொருள் | Meaning | |||
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். | The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது kadugu ciRuththAlum kAram kuRaiyAthu | The mustard its small, but it is still too spicy (literal)
| |||
Meaning | ||||
Don't measure the worth of a person by their size/shape Size does not matter. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
கருமி பெ. | Karumi | |||
பொருள் | Meaning | |||
1. கஞ்சன் (kanjan) | 1. Miser, niggard | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment