. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
அக்டோபர் - 12, புரட்டாசி - 26, ஷவ்வால் – 22 | ||||
Today in History | ||||
1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும். 1999 - உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது. 2001 - அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. பிறப்புக்கள் 1891 - எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956) 1918 - கே. கே. பிர்லா, இந்தியாவின் தொழிலதிபர் (இ. 2008) இறப்பு 1605 - பேரரசர் அக்பர், முகலாயப் பேரரசின் மன்னர் (பி. 1542) | ||||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | ||||
ச. வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பல்முக பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராக செயற்பட்டவர். உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
"இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார். அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். |
கே. கே. பிர்லா (கிருஷ்ண குமார் பிர்லா, அக்டோபர் 12, 1918 – ஆகஸ்ட் 30, 2008) என்பவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர். 1991 இல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீரமைப்புக்கு ஆதரவளித்த தொழிலதிபர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் மற்றும் பல்வேறு பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராக திகழ்ந்தவர். பிர்லா குழுமத்திற்கு நாடு முழுவதும் சர்க்கரை ஆலை, உர தொழிற்சாலை, இரசாயன, கனரக தொழிற்சாலை, புடவை, கப்பல்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ளன. 1997 இல் இவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
பேரரசர் அக்பர் (Akbar-e-Azam) (அக்டோபர் 15, 1542 – அக்டோபர் 12, 1605) என்பவர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர். இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் 1556 இல் தோற்கடித்தன. | |||
| ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.6 | குற்றங்கடிதல் | 2.1.6 | Avoiding faults | |
433 | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். thinaiththu NaiyAng kutRRam varinum panaiththu NaiyAk koLvar pazin-ANu vAr. Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem. | |||
பொருள் | Meaning | |||
பழிக்கு நாணுகின்றவர்கள், தினை*யளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள். | Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் agathin azhagu mugathil theriyum | The beauty of the soul is shown in the face (literal) | |||
Meaning | ||||
Face is the index of the mind. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
தினை பெ. | thinai | |||
பொருள் | Meaning | |||
1. மிகச்சிறிய அளவு (mikachchiRiya aLavu) 2. கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானிய வகை (kambu, kaezvaraku) | 1. A very small measure, trifle 2. millet | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment