Wednesday, October 14, 2009

Daily news letter 14-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 14, புரட்டாசி - 28, ஷவ்வால் – 24

இன்று: உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்] (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

IEC, ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த 3 அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1969ம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14-ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன.

Today in History

1888 - Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.

1926 - சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) வெளியிடப்பட்டது.

1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்

1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது

பிறப்புக்கள்

1643 - முதலாம் பகதூர் ஷா, இந்தியாவின் முகலாய மன்னன் (இ. 1712)

1927 - அஞ்சலி தேவி, தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை

1942 - சிவசங்கரி, தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

1981 - கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர் (பி. 1906)

2005 - சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)

சிறப்பு நாள்: உலகத் தர நிர்ணய நாள்

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

சிவசங்கரி (பிறப்பு ஒக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

 

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.

கே. பி. ஹரன் (அக்டோபர் 17,1906 - அக்டோபர் 14, 1981) தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர்.

கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப் பெற்றவர்.

 

ஊர்க்குருவி, ஐயாறன், கே.பி.எச் என்னும் புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

varumunnark kAvAthAn vAzkkai erimunnar

vaiththURu pOlak kedum.

His joy who guards not 'gainst the coming evil day,

Like straw before the fire shall swift consume away.

பொருள்

Meaning

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

The prosperity of him, who does not timely guard against faults, will perish like straw before fire.

இன்றைய பழமொழி

Today's Proverb

யானைக்கும் அடி சறுக்கும்

yAnaikkum adi SaRukkum

Even elephants do slip.

 

Meaning

Even the mighty do slip.

இன்றைய சொல்

Today's Word

எடை பெ.

edai

பொருள்

Meaning

1.  தராசில் நிறுத்திக் கணக்கிடப்படும் அளவு (tharAsil n-iRuththik kaNakkitappadum aLavu)

2.  நிறையளவு (n-iRaiyaLavu)

3.  மிகுதல் (mikuthal)

4.  துயில் எழுப்புதல் (thuyil elupputhal)

1.  The measure of weight.

2.  Standard weight.

3.  Increasing, lengthening.

4.  rousing from sleep.

 

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: