Friday, October 2, 2009

Daily news letter 02-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 02, புரட்டாசி - 16, ஷவ்வால் - 12

இன்று: காந்தி ஜெயந்தி , அனைத்துலக வன்முறையற்ற நாள் (International Day of Non-Violence) என்பது மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2இல் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 15 2007ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2ம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானித்தது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அஹிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியம் என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திரு காமராஜ் அவர்களைப் பற்றிய வீடியோ அவ்வை தமிழ்ச் சங்க இனையதளத்தில் upload செய்யப்பட்டுள்ளது.

Alternate Link: http://www.youtube.com/watch?v=jYYvaOs_vtk

குமாரசாமி காமராஜ் (ஏப்ரல் 13, 1954 – அக்டோபர் 2, 1963) பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு பாரதரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

 

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத கனரக முன் நிறுவனம் (BHEL)

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)

மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவ.

 

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராஜர் திட்டம்' ஆகும்.

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக் கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.  ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டு, அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது.  ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார்.

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார்.

 

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) விடுதலை இந்தியாவின் மூன்றாவது பிரதமர். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தேர்வு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்ததால் சாஸ்திரி மூன்றாவது பிரதமர் எனப்படுகிறார்.

 மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார். போக்குவரத்து துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தை கலைப்பதற்கு கம்பால் அடிப்பதற்கு பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும் படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்

பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார்.

இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

Today in History

1535 - ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக்( கனடாவின்) கண்டுபிடித்தார்.

பிறப்புக்கள்

1869 - மகாத்மா காந்தி, (இ. 1948)

1904 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966)

1908 - தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்.

இறப்புகள்

1906 - ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848)

1975 - காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903)

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.5

அறிவுடைமை

2.1.5

POSSESSION OF WISDOM

423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

epporuL yAryAr vAyk kaetpinum apporuL

meypporuL kANpa thaRivu.

Though things diverse from divers sages' lips we learn,

'Tis wisdom's part in each the true thing to discern.

பொருள்

Meaning

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

To discern the truth in everything, by whomsoever spoken, is wisdom.

இன்றைய பழமொழி

Today's Proverb

சிறு நுணலும்* தன் வாயால் கெடும்

The frog that talks is soon dead

CiRu nunalum than vaayaal kedum

Know when to keep quiet.

இன்றைய சொல்

Today's Word

நுணல் பெ.

n-uNal

பொருள்

Meaning

1.  தவளை (thavaLai)

1.  frog

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: