. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர் - 27, புரட்டாசி - 11, ஷவ்வால் - 7 | ||||
இன்று: உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்று 30வது ஆண்டு விழா கானாவில் நடைபெற உள்ளது. இதன் கருப்பொருள் "Tourism - Celebrating Diversity." | ||||
தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் (செப்டம்பர் 27, 1905 – மே 24,1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர்."உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு" என்பதே அவர் கொள்கையாக இருந்தது. இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்தவர். நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - ஜனவரி 31, 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்தவர். நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ், 1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
| நூலக தந்தை எஸ்.ஆர் அரங்கநாதன் (ஆகஸ்ட் 9, 1892 - செப்டம்பர் 27, 1972) டாக்டர் சீயாழி ராமாமிர்த ரங்கநாதன் நூலக இயக்கத்தின் முன்னோடி ஆவார். இவர் இந்தியாவில் நூலக இயக்கம் எழுச்சிபெறக் காரணமாக இருந்தவர். நூலக இயலில் "கோலன்" முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும். 1948-ல் பொது நூலகச் சட்டத்தை இயற்றிவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர், "நூல்கள் படிப்பதற்கே'', "ஆளுக்கு ஒரு நூல்'', "நூலுக்கு ஒரு ஆள்'', "நூலகம் வளரும்'' ஆகிய நூலகத்துக்கான விதிகளை வகுத்தவர். சென்னை நூலகச் சங்கம், இந்திய நூலகச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றிவர். ராவ்சாகிப், பத்மஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.
| |||
Today in History | ||||
1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார். 1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது. 1854 - "ஆர்க்டிக் கப்பல்" அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர். 1998 - கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது. பிறப்புக்கள் 1933 - நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009) 1905 - தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார்(இ.1981) 1907 - பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931) இறப்புகள் 1972 - எஸ். ஆர். ரங்கநாதன், இந்தியக் கணிதவிலாளர் , நூலக தந்தை(பி. 1892) சிறப்பு நாள் : உலக சுற்றுலா நாள் | ||||
|
| |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.4 | கேள்வி | 2.1.4 | Listening To Instruction | |
418 | கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. Kaetpinum kaeLAth thakaiyavae kaeLviyAl thOdkap padAtha sevi. Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear. | |||
பொருள் | Meaning | |||
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். | The ear which has not been bored by instruction, although it hears, is deaf. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
தலையை தடவி மூளையை உரிவான் Thalayai thadavi mULaiyai urivAn | He will pat your head and suck your brains. | |||
| People who act so friendly, but the motive is to swindle or destroy. " He covers me with his icings, and bites me with his bill." | |||
இன்றைய சொல் | Today's Word | |||
எட்டடிப் பறவை பெ. | Eddadip paRavai | |||
பொருள் | Meaning | |||
1. சிம்புள் (simpul), சரபம் (sarapam) | 1. A fabulous eight-legged bird capable of killing a lion. | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment