Thursday, October 1, 2009

Daily news letter 01-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 01, புரட்டாசி - 15, ஷவ்வால் - 11

இன்று: உலக முதியோர் நாள் -முதியோரை மதித்து அவர்களைக் கவுரவித்து அவர்கள் மீது கரிசனை செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1990ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது.

The theme this year is: "Celebrating the 10th Anniversary of the International Year of Older Persons: Towards a Society for All Ages".

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

 

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.

 

விருதுகளும் கௌரவங்களும்

1960 - ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ), சிறந்த நடிகருக்கான விருது.

1966 -  பத்ம ஸ்ரீ விருது

1984 - பத்ம பூஷன் விருது

1994 - செவாலியே விருது

1997 - தாதா சாகேப் பால்கே விருது

1962 - அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

 

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர்.

"லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

 

இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.

 

அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக 'காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.

 

எண்பத்தேழாம் அகவையில் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் "ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.

Today in History

1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.

1982 - சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.

2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

1953 - ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது

பிறப்புக்கள்

1847 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (இ. 1933)

1927 - சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)

இறப்புகள்

2008 - பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்

சிறப்பு நாள் :உலக முதியோர் நாள்

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.5

அறிவுடைமை

2.1.5

POSSESSION OF WISDOM

422

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

senRa idaththAl selavidA theethorEi

n-anRinpAl uyppa thaRivu

Wisdom restrains, nor suffers mind to wander where it would;

From every evil calls it back, and guides in way of good.

பொருள்

Meaning

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom

இன்றைய பழமொழி

Today's Proverb

சதை உள்ள இடத்தில் கத்தி நாடும்

The knife will seek the part which has flesh.

Sathai uLLa itaththil kaththi n-Adum

Said of scavenging people who look for people who have wealth.

இன்றைய சொல்

Today's Word

எட்டிப்பூ பெ.

ettippU

பொருள்

Meaning

1.  எட்டிப்பட்டம் பெற்ற வணிகருக்கு அரசன் தரும் பொன்மலர்.

Ettippattam peRRa vaNikarukku arasan tarum ponmalar

1.  Golden flower presented by the king to traders on whom the title "ETTI" had been conferred

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: