Monday, April 16, 2012

16-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

16-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௪ (4),திங்கள்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ, அந்த அளவிற்கு நீ மதிக்கப்படுவாய்.

குறளும் பொருளும் - 1153

காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்

Translation:

If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred

By those who trusted to his reassuring word?.

பொருள்:

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

Explanation:

If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.

உங்களுக்குத் தெரியுமா?

நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் ஓசனிச்சிட்டு(Hummingbird) களால் ஒரே இடத்திலும், பின்னோக்கியும், செங்குத்தாகவும் பறக்க முடியும்.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...)

ஆத்தா.. மாடு வளர்துச்சு, ஆடு வளர்துச்சு, கோழி வளர்துச்சு..

ஆவாரை, அவுரி, வாதநாராயணன், வேம்பு, கொடிபூவரசு, கிளிரிசிடியா, நெய்வேலி, காட்டாமணக்கு, எருக்கு, ஊமத்தை, துத்தி, காடாமணக்கு, வாதநாராயணன், அடாதொடா, நொச்சி, காக்கட்டான், பாலைக்கொடி, கோவை, பூவரசு, புங்கன், மயில்கொன்றை, தூங்குமூஞ்சி, கொன்றை, மந்தாரை, கல்யாணமுருங்கை, கடம்பு, நாவல், இலுப்பை, மருது. போன்ற செடிகளும், மரங்களும் அன்றைய கிராமத்தில் எங்கும் தென்பட்டவை, அனைவரும் அறிந்தவை. அன்று புதிய சாகுபடிக்காக ஏர் உழுதபின், சேற்றோடு இவற்றின் இலைகள் கலந்து 10-15 நாட்களுக்கு மக்க வைப்பார்கள். இவை போன சாகுபடியின்போது மண் இழந்த சக்தியை திரும்ப அதற்குத் தரும். இலவசமாக கிடைத்த தழை உரங்கள். இயற்கை இயற்கைக்கு அளித்த வரங்கள். தன்னை வளர்த்த மண்ணின் வளத்தை சீர் செய்ய தானாகவே வளர்ந்த தியாகிகள். மண்ணில் விளைந்த வைரங்கள். இன்று இதைப் பற்றி அறிய முயன்றவர் சிலர், அறிந்தும் இதை உபயோகப்படுத்தாதவர் பலர். இவையுடன் சேர்ந்த அடுத்த சக்தி, கழிவுப் பொருட்கள். "மாட்டு எரு மறு வெள்ளாண்மைக்கு, ஆட்டு எரு அந்த வெள்ளாண்மைக்கே" என்பது பெரியோர்களின் கூற்று. ஆட்டுச் சாணம் , மாட்டின் சாணம், கோழியின் கழிவு ஆகியவை இயற்கை உரங்கள், இதைப் பயன்படுத்துவது மண்ணிற்கு அதன் சக்தியை திரும்பத் தருவதோடு மட்டுமின்றி, மண்புழு போன்ற விவசாயிகளின் நண்பர்கள் அதிகபட்சம் பெருகி மண்ணோடு நட்பு கொண்டாடி, மண் சுழற்சிக்கு உதவும் எனவும் அறிந்திருந்தனர். இன்று இதன் உபயோகம் குறைவு. இந்த இயற்கை உரங்களை ஆராய்ந்து, இதில் என்ன சக்தி உள்ளது எனத் தெரிந்து அதை செயற்கையாய் உருவாக்கித் தருவதை உபயோகிக்கிறோம். இந்த செயற்கை, மண்புழுவை உருவக்காததால், அதையும் வேரிடத்திலிருந்து வாங்குகின்றனர் இன்றைய விவசாயிகள். இன்றும் பழைய முறைகளைப் பின்பற்றவும், அறியவும், அரசு, விவசாயிகளுக்கு பல கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கின்றனர். முன்னோர்களின் மரபணுக்கள் நமக்கு இந்த அறிவைத் தானே தந்தாலும், அரசுதானே செலவு செய்கிறது என கல்வியை கழித்து இதை ஒரு ஒரு சுற்றுலாவாக மட்டும் கொண்டாடுவது இன்றையப் பண்பாடாக இருக்கிறது. இதில் பங்குபெற விவசாயிகள் எனும் தகுதியை விட ரத்தங்களும், பிறப்புகளும் போடும் துதி தான் தகுதியாக உள்ளது. குறை சொல்லவில்லை.. எப்படி நம்மை நாமே முட்டாளாகிக் கொள்கிறோம் என்று ஒரு ஆதங்கம். இந்த சுற்றுலாவிற்கு எந்தெந்த விவசாயிகள்(???) செல்கிறார்கள், அவர்கள் உண்மையிலேயே விவசாயம் செய்பவர்களா? இச் சுற்றுலாவினால் பயன் அடைந்த நிலம் எவ்வளவு? எவ்வளவு சாகுபடி அதிகமாயிற்று? என RTI போட்டுத்தான் பார்க்கவேண்டும்.

How common manures measure up

NPK (Nitrogen, Phosphorous, and Potash (Potassium))

Manure

Chicken

Diary cow

Horse

Steer

Rabbit

Sheep

N-P-K

1.1 .80 .50

.25 .15 .25

.70 .30 .60

.70 .30 .40

2.4 1.4 .60

.70.30 .90

Note: Nutrient values of manures vary greatly, depending on the diet and age of the animals, and the nature and quantity of bedding in the mix.

அன்றைய இந்தியாவில், வேளாண்அமைச்சர்களும் வரும் காலம் செயற்கைக் காலம் என உணர்ந்து மக்களுக்கு இயற்கையின் சக்தியை திருப்ப வழி சொன்னார்கள்.

1951- வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சர் கே.எம். முன்ஷி இவ்வாறு கூறினார்: "உங்கள் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில் உயிர் சுழற்சியின் (life cycle) இரண்டு அம்சங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று நீர் சுழற்சி, மற்றொன்று ஊட்டச்சத்துச் சுழற்சி. இந்த இரு சுழற்சிகள் எங்கெல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து, அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளைப் பட்டியலிடுங்கள். உங்கள் கிராமங்களில்

(அ) இப்போதிருக்கும் நிலை,

(ஆ) நீர் சுழற்சியை முழுமையாக்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,

(இ). ஊட்டச்சத்து சுழற்சியை முழுமையாக்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,

(ஈ). கிராமத்தில் இந்த இருசுழற்சிகளும் முழுமையடைந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனைப் படம்

ஆகிய நான்கையும் தயாரியுங்கள். உங்கள்மேல் நீங்களே நம்பிக்கைவையுங்கள். உயிர் சுழற்சியை மீட்டால்தான் நமக்கு உண்மையான சுதந்திரமும் ஆனந்தமும் கிடைக்கும். நாம் உயிர் வாழ முடியும் என்று நம்பும் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த முயற்சியும் கடினமானது அல்ல.

ஏகாதிபத்திய வேளாண் ஆய்வுக் குழுவின் (Imperial Agricultural Research Council) முன்னாள் உதவி சேர்மன் சர். டி. விஜயராகவாச்சாரியார் முன்னுரை எழுதி, பள்ளிப் பாடப் புத்தகமாகப் பரிந்துரைக்கப்பட்டு 1949இல் வெளியான 'தென்னிந்திய வேளாண்மை - பகுதி 1' என்னும் நூல், முழுக்க, இன்று இயற்கை வேளாண்மை வல்லுநர்கள் அனைவரும் பிரபலப்படுத்திவரும் அத்தனை விஷயங்களையும் கொண்டுள்ளது. தழை உரம், தொழு உரம் போன்ற வகை வகையான இயற்கை உரங்கள் (அவற்றின் ஊட்டச்சத்துகள், தன்மைகள், அவற்றைத் தயாரிக்கும் முறைகள்), பயிர்களைத் தாக்கும் புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் பறவைகளைக் கவரும்/வரவேற்கும் உயிர் வேலி மரவகைகள் என்று இன்று உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் இயற்கை வேளாண்மை தொடர்பான பல விஷயங்களைக் கொண்ட பொக்கிஷமாய் விளங்குகிறது அந்தக் கையேடு.

தென்னிந்திய வேளாண்மை' என்னும் கையேட்டின் ஆசிரியர், "செயற்கை உரங்கள்" என்கிற தலைப்பில் 1949ஆம் ஆண்டு எழுதியுள்ளதைப் பாருங்கள். "மனிதனுக்குப் போதை தரும் கஞ்சா, அபினி, சாராய வகைகளைப் போல இந்தச் செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள். சாராய போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால், குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலை செய்து அழியும். அதனால், திரும்பத் திரும்ப நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும். அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை".

இன்று நாம் பிளாட் போடுகிறோமே இவையெல்லாம் இந்த போதைப் பொருட்களால் உயிர் நீத்த நிலங்கள். அன்று இதே மண்ணில் இயற்கை உரங்களால் சாகுபடி செய்த நாம் இன்று செயற்கை உரங்களால் சாகு(ம்)படி செய்கிறோம்.

காரணம் என்ன?

1. அன்று உழவு வாழ்க்கையாக இருந்தது. இன்று தொழிலாக இருக்கிறது.

2. அன்று உழவு பெருமையாக இருந்தது. உழவன் சட்டை போடாததால் அது white collar job, blue collar job, Gold collar job (http://en.wikipedia.org/wiki/Gold-collar_worker) எனும் வகையில் இல்லாது இருந்தது.

3. தன் நிலத்தில் தானே உழுவு செய்ததால் மண்ணிற்கு, மாந்தருக்குத் தரும் மரியாதை அளிக்கப்பட்டது. இன்று குத்தகை எனும் பெயரில் என் நிலத்தில் யாரோ பயிரிட, வருவது வரட்டும் என நிலத்தின் உரிமையாளரும் ( உழவன் என்பதைவிட இப்படி சொல்வதையே பெருமையாகக் கருதுகின்றனர்), வாடகைத் தொழிலாளியும் ( உழவைத் தொழில் எனச் செய்வதால் தொழிலாளி என்றே கூறுவோம்) மண் எனும் தாயை கொன்று கூறு போடுகின்றனர். கொலைகாரன் வேறு நிலத்திற்கு குத்தகை தேடி சென்றுவிடுகிறான். உரிமையாளர் நிலத்திற்கு அடுக்குமாடி வீடு எனும் பெயரில் கல்லறை எழுப்பி விடுகிறார்.

4. விவசாயம் மட்டும் நம் குடும்பத்தை வாழ வைக்குமா? என்ற பயம், சட்டை போடாமல் வேலை செய்வதை விட ஏதாவது ஒரூ Collar job நல்லது என வெளிவரத் துடிக்கும் இளைஞர்கள்.

5. விவசாயம் பணம் சம்பாதிக்க உதவாது என எழுந்த தவறான அபிப்பிராயம்.

விடை என்ன?

1. சிறு விவசாயிகள் இணைந்து ஒரு நிறுவனம் போன்று தானே செயல்படுதல். அதிக நிலத்தில் விவசாயம் செய்யும் போது இயந்தின்களை உபயோகிப்பதோ, தரமான விதைகளை அதிகம் வாங்கும்போது நுரைத்த விலைக்கு வாங்கவோ, வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு ஒரு நிலைய வருவாய் வர வழி செய்யவோ மேலும் ஒரு தர நிர்ணயத்தி பாதுகாக்கவோ முடியும். மேலும் இணைந்து உண்டாக்கிய அதிகமான சாகுபடி நேரடி விற்பனைக்கும், இடைத் தரகர்களை ஒழிக்கவும் உதவும். தனித் தனியாக செய்த வேலையை ஒன்றாகச் செய்யும் போது மனித, இயற்கை, செயற்கை சக்திகளை திறமையாக உபயோகிக்க முடியும்.

2. எப்படி மருத்துவப் படிப்பு முடித்தவுடன், கிராமங்களில் பணி புரிய வேண்டுமென ஒரு கட்டாயம் உள்ளதோ அதுபோல், IIM போன்ற கல்லூரிகளில் படித்த மாணவர்கள் இரண்டாண்டாவது கிராமங்களில் விவசாய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தன் அறிவை பயன்படுத்த உத்தரவு இட வேண்டும். இந்த நிறுவனங்களில் அவர்கள் பணித் திறன் தரமிடப் படவேண்டும். இந்தத் தரம் அவர்கள் அடுத்த பணிக்கு செல்லும்போது ஒரு அதிக பட்ச தகுதியாக உபயோகிக்க வழி செய்யப்படவேண்டும். ( மருத்துவப் பணிகளில் கூட அவர்கள் கிராமங்களில் செய்த பணியை நிர்ணயித்து மேல்படிப்பிற்கான தேர்வில் சில மதிப்பெண்கள் வழங்க அரசு முன்வந்தால் அதிகம் பேர் கிராமம் செல்ல வாய்ப்புண்டு)

3. இயற்கை விவசாயம் செய்யும் நிறுவனங்களில் முதலீடு, வருவாயில் வரி விலக்கு என பொது மக்களுக்கும் இத் துறையில் பங்கேற்க தூண்டுதல்.

4. செயற்கை உரங்களின் ஆதரவுத் தொகையை நிறுத்தி, இயற்கை உரங்களுக்கு ஆதரவு தொகை தருதல். இயற்கை உரங்கள் செய்யும் தொழிற்சாலைகளை ஒவ்வொரு கிராமத்திலும் நிறுவுதல்.

அன்றைய மனிதனுக்கு பசுந்தாழ் உரங்கள், எருக்கள் போன்றவை நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை தரும் எனத் தெரியாது. அவனிடமிருந்த ஒரே சக்தி அவசியம், அருவருப்பு இவ்விரண்டில் எது முக்கியம் என உணரும் சக்தி. சாணத்தை தொட அருவருப்பு பட்டதில்லை. அவன் கற்றது அனுபவத்தில். கற்று அறிந்த நல்லதை நமக்கு கற்றுத் தரவும் செய்தான். நாம்தான் அறிவு இயலைவிட அறிவியலை மட்டும் நம்பி நிலக் கொலைகாரர்களாக மாறிவிட்டோம். மேலும் இன்று பால், காய்கறி, பழங்கள் அனைத்திலும் பூச்சி கொல்லிகளின் தாக்கம் அதிகமென கூவி அழுகிறோம். organic என்று முத்திரையிடப்பட்ட பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்.

நம்புவோம்.. சுழற்சி வரும்.. நல்ல சத்தான நிலம், சத்தான உணவுகள் வரும். நிலத்தின் சக்தி அன்று போல் மாறி, நம் வருங்காலம் அறிவியலோடு அறிவு இயலையும் ஒன்றாக சேர்த்து நல்ல பயனடையும் என நம்புவோம்...

உங்கள்மேல் நீங்களே நம்பிக்கை வையுங்கள். உயிர் சுழற்சியை மீட்டால்தான் நமக்கு உண்மையான சுதந்திரமும் ஆனந்தமும் கிடைக்கும். நாம் உயிர் வாழ முடியும் என்று நம்பும் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த முயற்சியும் கடினமானது அல்ல. சரியாகத்தான் சொன்னார் அன்று...

Jobs Available

தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

· நிருபர்கள் ( Reporters)

· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)

· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)

· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)

தகுதிகள்:

· பட்டதாரி

· 45 வயதிற்கு உட்பட்டவர்

· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்

· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்

· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.

புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

16/17-4-2012

7 PM

Stein Auditorium, India habitat Centre, Lodhiroad, New Delhi

Swathi Smriti 2012

Bi Century celebration of Maharaja Swathi Thirunaal

Rasikapriya

9818192497, 9810429874

22-4-2012

8 AM – 10 AM

Hare Krishna Mandhir (ISKON Temple), Opp to NTPC Office, Sector 33, Noida

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on "Ramanum Krishnanum".

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

22-4-2012

11:15 AM

Loka kala Manch auditorium (Lodhi Road – near ram mandir)

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Ramanujars' Bagavadh Gita bashyam

21/22-4-2012

7-9 PM

Delhi Tamil Sangam

RK Puram. NDelhi

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Rama Brahmam

Delhi Tamil Sangam & Nadha Brahmam

Accomadation available for rent

1st Floor, Sector 23, Noida. 1 BHK (equivalent to2BHK). Please contact Sundar – 9717222579

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: