அமரர் சுப்புடு அவர்களின் நினைவாக அவர் பெயரில் புதுடில்லி பகுதியைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க "வடக்கு வாசல்" பத்திரிக்கை முன்வந்துள்ளது. கர்னாடக மரபில் குரலிசை மற்றும் கருவி இசையில் தேர்ச்சி பெற்ற இருவர்க்கு இவ்விருது வழங்கப்படும். தகுதியுடையோர் தங்கள் தன்விவர குறிப்புகளை அனுப்ப இறுதி நாள் 10-7-2011. மேலும் விவரங்களுக்கு http://vadakkuvaasal.com/component/content/article/215.html
Watch out for the new posting at Member to Members section.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௨ய (20) , செவ்வாய் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
"கொள்ளிவாய்ப் பிசாசு தோற்றப்பாடு" உருவாகக் காரணமான வாயு மீத்தேன் (CH4) ஆகும். கிராமப்புறங்களில் பூமியிலிருந்து திடீர் திடீர் என நெருப்புச் சுடர் தோன்றி விட்டு விட்டு எரிந்துகொண்டே நகருவதைப் பார்த்திருக்கலாம். இதனைப் பார்க்கும் மக்கள் அறியாமையின் காரணமாக கொள்ளிவாய்ப் பிசாசு போகிறது என்று கூறுவர்.
பூமியின் மீது கொட்டப்படும் அல்லது கொட்டும் இலைகள் மற்றும் மக்கும் பொருள்கள் ஆகியவை பாக்டீரியாக்களின் வினையினால் அழுகிய நிலையை அடைகின்றன. அழுகிய நிலையை அடைந்தபோது மீத்தேன் வாயு உண்டாகிறது. பூமிக்குள் (சதுப்பு நிலப் பகுதிகளில்) உண்டாகிய இந்த மீத்தேன் வாயு பூமியின் மேல் உள்ள சிறுசிறு துளைகளின் வழியாக வெளியேறுகின்றது.
மீத்தேன் வாயு சாதாரண வெப்ப நிலையில் தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரியும் தன்மையுடையது. எனவே, பூமியிலிருந்து வெளியேறிய மீத்தேன் வாயுவானது வாயு மண்டலத்தினுள் வந்தவுடன் தானாகத் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது. இந்த உண்மையை அறியாத மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு உலவுவதாகக் கூறுகின்றனர். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
புதிய அமைச்சராக பொறுப்பேற்றார் பி. செந்தூர் பாண்டியன் தினமணி | ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்துவோம்: கடாபி எச்சரிக்கை தினமணி | |||||||||||||||
அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம் தினத் தந்தி | தரநிலையில் சாய்னா-வெஸ்னீனா 2வது இடம் வெப்துனியா | |||||||||||||||
சக்சேனா கைது எதிரொலி: பழைய வழக்குகளும் சூடுபிடிக்கின்றன தினமலர் | 3 நாட்களுக்கு 'ஹெட்லைன்ஸ் டுடே' டிவியில் 'இலங்கையின் கொலைக்களம் ... தட்ஸ்தமிழ் | |||||||||||||||
குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றம்: பிரதமர் தட்ஸ்தமிழ் | ஒபாமா சுடப்பட்டதாக ஃபாக்ஸ் டி.வி.,யின் டுவிட்டரில் வதந்தி தினமணி | |||||||||||||||
பத்மநாப சுவாமி கோவிலில் கடைசி ரகசிய அறை திறப்பது ஒத்திவைப்பு தினமலர் | இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை தினமலர் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | ||||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ இன்று முதல்ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....3. கடற்கரையிலே நக்கீரர்தென்பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தெய்வ மணங் கமழ்ந்து திகழ்வது செந்தில் என்னும் திருச்செந்தூர். அங்கு அலை பாட மயில் ஆடும்; அகம் உருக அருள் பெருகும். ஒரு நாள் காலைப் பொழுதிலே அக் கடற்கரையில் வந்து நின்றார் நற்றமிழ் வல்ல நக்கீரர். தமிழ் ஆர்வம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. திருச்சீர் அலைவாய் என்ற ஆலயத்தின் அருகே நின்று அவர் பேசலுற்றார்:- "செந்தில் ஆழியே! உன்னைக் கண்டோர் எல்லாம் - உன் காற்றை உண்டோர் எல்லாம் - உன்னைப் பாராட்டிப் போற்றினர். குமரிக் கடல்போல் நீ கொடுங் கடல் அல்லை; உன் கரையில் நின்று குமுறினார் எவரும் இல்லை. தமிழகத்தில் உள்ள கடற்கரையூர்களை யெல்லாம் நான் கண்குளிரக் கண்டுள்ளேன். பட்டினம் என்று புகழ் பெற்ற காவிரிப்பூம் பட்டினத்தின் கடற்கரையை நான் அறிவேன். அங்கு மலை போன்ற மரக்கலங்கள் அலைகடலில் நீந்தி வருதலும் போதலும் ஆனந்தமான காட்சியே. ஆயினும், அக் கரையில் எப்போதும் ஆரவாரம்! அல்லும் பகலும் ஓயாத பண்டமாற்று! அமைதியை நாடுவார்க்கு அக் கடற்கரையில் இடமில்லை. எம் மருங்கும் வணிகர் கூட்டம்; பொருளே அவர் நாட்டம். உன்னிடம் ஆரவாரம் இல்லை; அமைதி உண்டு. பரபரப்பு இல்லை; பண்பாடு உண்டு. மரக்கலத்தால் வரும் பொருட் செல்வம் இல்லை; அதனினும் மேலாய அருட்செல்வம் உண்டு. + "வேந்து மேம்பட்ட பூந்தார் மாற! நீ நீடு வாழியே, நெடுந்தகை! தாழ்நீர் வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பலவே." - புறநானூறு 55.
"நீல நெடுங்கடலே! உன் + தொடுவானில் உதிக்கின்ற செஞ்சுடரைக் காணும்பொழுது, ++ ஆடும் மயிலில் எழுந்தருளும் முருகன் திருக்கோலம் என் கண்ணெதிரே மிளிர்கின்றது. என்னையாளும் ஐயனை- செய்யனை-செந்திற் பெருமானைப் பாடவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கின்றது. ஆயினும், பார்க்குமிடம் எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை எப்படித் தமியேன் பாடுவேன்? ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ் சோதியை எங்ஙனம் சொல்லோவியமாக எழுதிக் காட்டுவேன்? உயிர்க் குயிராய் நின்று உலகத்தை இயக்கும் உயரிய கருணையை எவ்வாறு சொற்களால் உணர்த்துவேன்? அவன்ஆட்டுவித்தால் உலகம் ஆடும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. இத்தகைய இறைவனாகிய முருகனை ஏழையேன் என் சொல்லி ஏத்துவேன்? + தொடுவான் – Horizon ++ "உலகம் உவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக்கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தி வாழ்வே" என்று என் அத்தனை நித்தலும் கைதொழுவேன். ."அலைவாயில் அமர்ந்தருளும் அண்ணலே! செந்திலம்பதியைப் படைவீடாகக் கொண்ட கந்தப் பெருமானே! உன்னைக் கலியுக வரதன் என்பார்; கடற்கரை யாண்டி என்பார்; அரந்தை கெடுத்து வரந்தரும் ஆண்டவன் என்பார்; செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை என்பார்; இன்று போலவே என்றும், எம்பெருமானே! கடற்கரையில் நின்று நின் அடியாரைக் காத்தருளல் வேண்டும். தமிழ் மக்களெல்லாம் நின் அடைக்கலம்" என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கடற்கரையை விட்டகன்றார் நக்கீரர். | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3,20 | (kaL uNNAmai) | 2.3.20 | Avoiding Drunkkenness | |||||||||||||
Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity | ||||||||||||||||
குறள் எண் 923 | ||||||||||||||||
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் | ||||||||||||||||
EendRaaL mugaththeyum innAthAl enmatruch sAnROr mugaththu kaLi | ||||||||||||||||
The drunkard's joy is sorrow to his mother's eyes; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?. | Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகிறது. பெண்ணின் மதிப்பறிந்து அவர்களுக்கு தகுந்த மரியாதை தருவது நல்ல குடும்பத்தின் அழகு. | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
Posted on 5-7-2011 URGENT REQUIREMENT FOR THE FOLLOWING POSITIONS AT GR NOIDA /NOIDA (PH-II) FOR A WELL REPUTED ORGANIZATION DEALING WITH INDUSTRIAL AND DATACOM PRODUCTS: [Thanks to Mr.Hariharan - harih_1968@yahoo.com for sending this info] · SALES MANAGER / SALES ENGINEER – BE (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED INDUSTRIES. LOCATION GREATER NOIDA / NOIDA / GUJARAT (RESIDENT ENGINEER) · MARKETING SERVICES MANAGER – BE / B.TECH (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED / INDUSTRIEAL PRODUCTS INDUSTRIES. · SUPPLY CHAIN HEAD / MANAGER – HAVE GOOD EXPOSURE IN PURCHASE, LOGISTICS, VENDOR MANAGEMENT. IF ADDITIONAL QUALIFICATION IN MATERIAL MANAGEMENT, IT WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 7 YEARS EXPERIENCE IN SCM ESP IN PURCHASE FUNCTION IN INDUSTRIAL / DATACOM PRODUCTS MANUFACTURING INDUSTRY · PRODUCTION HEAD / MANAGER - HAVE GOOD EXPOSURE IN PRODUCTION AND ALLIED FUNCTIONS. BE / B.TECH (ELECTRICAL, ELECTRONICS & COMMUNICATIONS) IF ADDITIONAL QUALIFICATION DIPMLOA / DEGREE IN OPERATIONAL MANAGEMENT, WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 10 YEARS EXPERIENCE IN MANUFACTURING OF INDUSTRIAL / DATACOM PRODUCTS / POWER SUPPLY MANUFACTURING INDUSTRY · DESIGN ENGINEER – BE / B.TECH / DIPLOMA (MECH) FOR THEIR PHASE-II NOIDA. EXP : 2 – 6 YEARS · QUALITY ENGINEER – BE/B.TECH/DIP (MECH) WITH RELAVANT EXPERIENCE IN R&D / Q&A DEPT. LOCATION: NOIDA (PH-II) · ITI (ALL TRADES) WITH 4 – 7 YEARS EXP. WITH ASSEMBLY KNOWLEDGE IN PRODUCTION LINE TO WORK AT PHASE-II NOIDA LOCATIONS. COMPENSATION AND BENEFITS: ATTRACTIVE BENEFITS BESIDES BEST SALARY PACKAGE IN THE INDUSTRY. GOOD CAREER PROGRESSION AND BEST WORKING ENVIRONMENT. ALL CANDIDATES (MANAGERS / ENGINEERS) SHOULD HAVE VERY FLAIR IN ENGLISH LANGUAGE. Interested candidates please EMAIL your CV mentioning position and location and industry you are looking for on the SUBJECT. Other details along with your resume including your current package and contact details, etc. in strict confidence to: goldenjobsoffer@yahoo.in. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment