Monday, July 4, 2011

Daily news letter 04-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam – விவேகானந்தர் நினைவு நாள்

 வரலாற்றில் இன்று ( Today in History) ஓராண்டுக்களுக்கு மேல் வந்துகொண்டிருப்பதால் செய்திகள் மறுபதிப்பாகிறது. எனவே இன்று முதல் இபபகுதியை நிறைவு செய்கிறோம். Project Madurai (மதுரை தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்) பல அறிய நூல்களை கணிணி வடிவாக்கி நமக்கு தருகிறார்கள் (http://projectmadurai.org) அவற்றிலிருந்து சில நூல்களை உங்களுக்கு அளிக்கிறோம். ( முழு நாவல்/ கட்டுரை/நாடகம்/கவிதைகள் ஆகியவை சிறு சிறு பகுதிகளாக அளிக்கப்படும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௧௯ (19) , திங்கள்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியும் ஆங்கிலமும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்  தினத் தந்தி

தாய்லாந்து நாட்டுக்கு புதிய பெண் பிரதமர் தினத் தந்தி

சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 2ஜி வழக்கு விசாரணை தினமணி 

விம்பிள்டன்: யாக்கோவிச் புதிய சாம்பியன் பிபிசி

பத்மநாத சுவாமி கோயிலில் சுமார் 1 லட்சம் கோடி தங்கநகைகள் Bharath News Online

தோனிக்கு தடை ஆபத்து  வெப்துனியா

சாய்பாபா ஆசிரம அலுவலக அறையில் மேலும் தங்க நகைக் குவியல் தட்ஸ்தமிழ்

துபாயில் முன்னணி நிறுவனத்தில் பணி சென்னையில் 4ம் தேதி நேர்முக ... தினமலர்

காங்கிரஸ் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி விலகல் தினத் தந்தி

இலங்கையின் கொலைக்களம் இந்திய ஊடகங்களில் வெளியாகவுள்ளது  நெருடல் இணையம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

இன்று முதல்

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

2. கடற்கரையிலே இளங்கோவடிகள்

பாரதநாடு ஒரு பழம் பெரு நாடு. அந் நாட்டின் தென் கோடியாய்த் திகழ்வது குமரி முனை. குமரிக் கரையிலே நின்று கடலைக் காண்பது ஓர் ஆனந்தம். தமிழ் நாட்டுக் குணகடலும் குடகடலும் குதித்தெழுந்து ஒன்றோடொன்று குலாவக் காண்பது குமரிக்கரை. கருமணலும் வெண்மணலும் அடுத்தடுத்து அமைந்து கண்ணுக்கு விருந்தளிப்பதும் அக் கரையே. கன்னித் தமிழும் கவின் மலையாளமும் கலந்து மகிழக் காண்பதும் அக் கரையே.


இத்தகைய குமரிக் கடற்கரையிலே வந்து நின்றார் ஒரு முனிவர். அவர் திருமுகத்திலே தமிழின் ஒளி இளங்கிற்று. நீலத்திரைக் கடலை அவர் நெடிது நோக்கினார். அந் நிலையில் அவருள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது. தண்ணொளி வாய்ந்த அவர் வண்ணத்திருமுகம் வாட்டமுற்றது; கண் கலங்கிக் கண்ணீர் பொங்கிற்று. தழுதழுத்த குரலிலே அவர் பேசத் தொடங்கினார்:-


"ஆ! குமரிக் கடலே! உன்னைக் காணும்போது என் நெஞ்சம் குமுறுகின்றதே! உன் காற்றால் என் உடல் கொதிக்கின்றதே! அந்தோ! அலை கடலே! எங்கள் அருமைத் தமிழ்நாடு உனக்கு என்ன தீங்கு செய்தது? எங்கள் தாய்மொழியைப் போற்றி வளர்த்த பாண்டியன் உனக்கு என்ன பிழை சொய்தான்? தமிழ் நாட்டு மூவேந்தருள் எமது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை முன்னின்று ஆதரித்தவன் அவனே என்பதை நீ அறியாய் போலும்; கண்ணும் ஆவியுமாகத் தமிழ் அன்னையைப் பொற்றினானே அம் மன்னன்! பழந் தமிழைப் பண்ணுறத் தெரிந்து ஆய்ந்து பசுந்தமிழ் ஆக்கினானே! அவன் புகழை அறிந்து நீ அழுக்காறு கொண்டயோ? அன்றி, உன் முத்துச் செல்வத்தை அவன் வளைத்து வாரிக்கொண்டான் என்று வன்கண்மை யுற்றாயோ?

"கடுமை வாய்ந்த கருங்கடலே! மண்ணாசை உன்னையும் விட்டபாடில்லையே! மண்ணைத் தின்று தான் தீரவேண்டுமென்றால், பண்பு வாய்ந்த எங்கள் பாண்டிநாடுதானா உன் கண்ணிலே பட்டது? விலங்கினம் போன்ற வீணர் வாழும் நாடுகளை நீ விழுங்க லாகாதா? நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் தீயவர் நாட்டை நீ தின்று ஒழித்த லாகாதா? பிற நாட்டாரது உரிமையைக் கவர்ந்து, அவரை அடிமை கொள்ளும் பேராசைப் பேயர்கள் வாழும் நாட்டைப் பிடித்து உண்ண லாகாதா? நிறத் திமிர் கொண்டு அறத்தை வேரறுக்கும் வெறியர் வாழும் நாட்டை நீ அழித்து முடித்த லாகாதா? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற பரந்த உண்மையைப் பறைசாற்றிய எங்கள் தமிழ் நாடா உன் மனத்தை உறுத்தியது? மன்னுயிரை யெல்லாம் தம்முயிர்போல் கருதிய முனிவரும் மன்னரும் வாழ்ந்த எங்கள் தமிழகமா உன் கருத்தை வருத்தியது? நாடி வந்தவர்க்கெல்லாம் நாடளித்து, வாடி வந்தவர்க்கெல்லாம் விருந்தளித்து அறநெறியில் நின்ற எங்கள் அருமைத் திருநாடா உன் பேய்ப்பசிக்கு இரையாக வேண்டும்?


"பொல்லாக் கடலே! தென்னவனுக் குரிய எத்தனை ஊர்களைத் தின்றுவிட்டாய்! எத்தனை ஆறுகளைக் குடித்து விட்டாய்! எத்தனை மலைகளை விழுங்கி விட்டாய்! பழங்காலத்தில் பஃறுளி (பல்துளி) என்ற ஆறு பாண்டியனுக்கு உரியதாயிருந்ததென்று தமிழ்க் கவிதை கூறுகின்றதே! அந்த ஆற்றின் அழகைச் சங்கப் புலவராகிய நெட்டிமையார் பாடினாரே! அந்த ஆறெங்கே? அதன் பரந்த மணல் எங்கே? அவ் வாற்றைக் கொள்ளை கொண்ட உன் கொடுமையை அறிந்து, கண்ணீர் வடித்தானே எங்கள் பாண்டியன்! அன்று அவன் அழுத குரல், இன்றும் உன் காற்றின் வழி வந்து என் காதில் விழுகின்றதே! இம்மட்டோ உன் கொடுமை? எங்கள் பழந்தமிழ் நாட்டின் தென்னெல்லையாகத் திகழ்ந்த குமரியாற்றையும் குடித்து விட்டாயே! 'தமிழகத்தின் வடக்கு எல்லை திருவேங்கடம், தெற்கு எல்லை குமரியாறு' என்று பனம்பாரனார் பாடினாரே! அக் குமரியாறு எங்கே? 'தமிழ் கூறும் நல்லுலகத்தின்' எல்லையாக நின்ற அந்த ஆற்றையும் கொள்ளை கொண்டு எங்கள் வரம்பழித்து விட்டாயே! பஃறுளி யாற்றுக்கும் குமரி யாற்றுக்கும் இடையே அமைந்த நாடு நகரங்கள் எல்லாம், இருந்த இடந் தெரியாமல் உன் கொடு மையால் கரைந்து ஒழிந்தனவே! அந் நிலப்பரப்பில், அடுக்கடுக்காக உயர்ந்து ஓங்கி நின்ற குமரி என்னும் பெருமலையும் உன் பாழும் வயிற்றில் பட்டு ஒழிந்ததே! ஐயோ! நீ எங்கள் மண்ணைக்கடித்தாய்; ஆற்றைக் குடித்தாய்; மலையை முடித்தாய் இப்படி எல்லாவற்றையும் வாரி எடுத்து வயிற்றில் அடக்கும் உன்னை 'வாரி' என்று அழைப்பது சாலவும் பொருந்தும்! நீ வாரி உண்டாய்! நீங்காத வசையே கொண்டாய். உன் கொடுமையால் தமிழ் நாடு குறுகிற்று; என் உள்ளம் உருகிற்று.

+ " நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு" என்று குறுகிய தமிழ் நாட்டைப் பாடியபொழுது என் மனம் என்ன பாடு பட்டது என்பதை நீ அறிவாயோ?


"நெடுங்கடலே! செந்தமிழ் நாட்டைக் கொள்ளை கொண்டமையால் நீ கொடுங்கடல் ஆயினாய்! உன் கொடுமையால் நாடிழந்த பாண்டியன் வடதிசையிலுள்ள கங்கையும் இமயமும் கொண்டு வசையொழிய வாழ்ந்தான். உன்னைத் தூற்றுவேன்; அம்மன்னனைப் போற்றுவேன்.

++ "வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"

 ++ சிலப்பதிகாரம்: காடுகாண் காதை.என்று வாழ்த்திக்கொண்டு கடற்கரையை விட்டு அகன்றார் அம் முனிவர்.

+ நெடியோன் குன்றம் = திருவேங்கடமலை. தொடியோள் பௌவம் = குமரிக்கடல்.

- சிலப்பதிகாரம்:வேனிற்காதை

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  922

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

uNNRkka kALLai uNiluNga sAnROraan

eNNAp paaveNdaa thaar

Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.

பொருள்

Meaning

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

இன்றைய பொன்மொழி

அன்பு மூளையில் இருந்து வருவது அல்ல; இதயத்திலிருந்து வருவது

Member to Members

1.    Posted on 1-7-2011 North South Foundation (NSF), USA  announces the start of a new scholarship season in India

 

Eligibility:

 

a)  Amongst the top 10% in 10th or 12th or CET/JET ranks in your state

AND

b)   Your annual family income is less than Rs. 60,000 (Rs. 40, 000 in rural areas)

AND

c)   You have secured admission to professional courses like Engineering, Medical, Dental, Nursing, Polytechnic, B.Sc (Agr), B.Pharm, B.V.Sc, etc.

d)   Students facing extreme hardship may apply even if they don't meet the income and marks criteria.

 

Last year NSF gave more than 900 scholarships to college bound students all over India.  NSF would like to help more students this year and seek your help in spreading the message.  Please visit NSF's newly updated scholarships section for more information. http://www.northsouth.org/public/India/2011_12_scholarshipsannouncement.aspx 

 

You will find a downloadable flier  (http://www.northsouth.org/public/india/Doc/2011scholarshipflier.pdf ) and an application form (http://www.northsouth.org/public/India/Doc/NSF2011.pdf ) for you to email your friends and family in India.

 

If you come across a eligible candidate in your neighborhood, relation, village, town or through friends encourage them to apply for the scholarship with NSF.

 

One of our DOK reader Mrs. Malathi Ragothaman from USA, who is also one of the member of the NSF organisation has requested the readers of Avvai Tamil Sangam's DOK  newsletter to spread this information to as many as possible people in order to help the eligible candidates get scholarship from NSF. Sufficient information is available in their website but in case more info is required please write to Mrs.Malathy Ragothaman at mala_raghu@yahoo.co.in.

 

Avvai Tamil Sangam expresses sincere thanks to Mrs.Malathy for providing the information about NSF which may be useful to some of our members and their families.

 

2.    Posted on 29-6-11: Flat on rent at Dwarka: FLAT LOCATION  : 2BD,3RD FLOOR  , SECTOR 18 B  with complete wood work, inverter and Geycer., No hesitation to rent out to student / working bachelor  .  In case of family preferably vegetarian. RENT  : Rs.14000/- p.m.      Additional  :    One  month  Security  Deposit , One month advance  + pre rent. Contact detail  :  R RAJESWARI  -  (M) 9810619978, email  : rraji1512@gmail.com,V RAMESH  -  (M) 9810433692 .

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: