தலைநகரில் தமிழர்
நண்பர்களே,
இன்றைய (7-7-2011) ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் "Capital Connect with India's South" என்பது பற்றிய ஒரு பக்க செய்தி வெளியாகியுள்ளது. (please visit http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HD/2011/07/07/ArticleHtmls/Capital-connect-with-Indias-south-07072011004004.shtml?Mode=1). தமிழ்நாட்டை சேர்ந்தவர்களைப் பற்றியும் , கேரள தேசத்தை சேர்ந்தவர்களைப் பற்றியுமான கட்டுரை இது.
இதை கூர்ந்து கவனித்து படிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். பல நல்ல விஷயங்களை இதன் மூலம் அறியமுடிந்தாலும் முடிவில் மனதில் ஒரு சிறிய நெருடல்.
தமிழகம் பற்றிய கட்டுரை எப்படி ஒரு சிலர் இங்கு வேலைக்காக வந்த தமிழ் மக்களின் தேவையை உணர்ந்து சில கடைகளையும், உணவகங்களையும் உருவாக்கி தனி மனித பயன் அடைந்தனர் என்பது பற்றியே அதிகம் உள்ளது. தமிழ் கலை, கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள், முறைகள் எப்படி இங்கு பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றிய செய்தியே இல்லை. மேலும் தலை சிறந்த தமிழர்களாக குறிப்பிடப்பட யாருமே இல்லை. இக்கட்டுரைப் படி தமிழகம் டில்லிக்கு செய்த பெரிய உபகாரம் இட்லி, தோசையை அறிமுகப்படுத்தியதே.
கேரளம் பற்றிய செய்தியைப் பாருங்கள். எப்படி இரு டசன் ICS அதிகாரிகள் பல்வேறு வேலைகளுக்காக கேரளத்திலிருந்து மக்களை கொணர்ந்தனர். அவர்கள் சமூகம் எப்படி வளர்ந்தது, குறிப்பிடத் தக்க கேரள தேசத்தினர் யார், யார்?, கேரள சபா எப்படி உருவாகியது, அதன் இன்றைய நிலைப்பாடு,எப்படி அந்த சமூகத்தினர் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர், கேரள அரசு "மிஷன் மலையாளம்" எனும் பெயரில் நடத்தும் மொழி வளர்க்கும் திட்டம் பற்றிய செய்திகள் ஆகியன பற்றிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளது
சமூகம் பற்றிய செய்திகள் "நாம்" எனும் கோட்பாட்டுடன் இருக்கவேண்டும் ஆனால் மாறாக "நான்" எனும் கோட்பாட்டையே கொண்டு அமைந்துள்ளது தமிழகம் பற்றிய கட்டுரை. கேரளம் பற்றிய கட்டுரையோ சமூகம் பற்றியே செய்திகளை மட்டுமே கொண்டுள்ளது.
நம் சமூகம் ஒற்றுமையாக இல்லை எனும் தோற்றமளிக்கும் இக்கட்டுரை பற்றிய ஒரு அலசல் வேண்டும்.
என் மனதி;ல் எழுந்த கேள்விகள்
1. சமூகம் பற்றிய சிந்தனையே நமக்கு இல்லையா? இல்லை, நமக்கு சொல்லத் தெரியவில்லையா?
2. கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் சேர்ந்தோர் ஒற்றுமையைப் பாராட்டும் நாம் அதைப் பின்பற்ற என் முனைவதில்லை?
3. "நான்" ஒரு தனி மனித ஈகோ "நாம்" எனும் ஒற்றுமைக்கு எதிராக உள்ளதா?
4. தமிழர் எனும் ஓரின முக்கியத்தைவிட வேறு எதற்காவது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
5. தமிழ் பண்பாடு, கலை,மொழி இதன் மேலான பற்று இல்லையா?
ஏன் நாமும் ஒன்றாக இருக்ககூடாது. நாம் தலைநகரில் தமிழர்களாக ஏன் இருக்க முடியவில்லை, தமிழராக இருக்கவே விரும்புகிறோமே அது ஏன்?
தலைநகரில் தமிழர் – இதுதான் இன்றைய நிலை.
நாம் காண வேண்டிய நிலை தலைநகரில் தமிழர்கள்.
இது தில்லி மட்டுமல்ல அதிகப்படியான இடங்களில் நாம் விடை தேட விரும்பும் ஒரு புதிர்.
No comments:
Post a Comment