அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௨௯ (29) , வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
சீனப் பெருஞ் சுவர், மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'காட்டுமிராண்டி'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காகக் கட்டப்பட்ட அரண் ஆகும். சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அல்ல, ஆனால் அவர்கள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பது ஆகும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ராகுல் காந்தி `திடீர்' கைது தினத் தந்தி | அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் கனிமொழி நேரில் ஆஜர் நியூஇந்தியாநியூஸ் | |||||||||||||||
வாக்கு எண்ணிக்கை முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்: ஜெயலலிதா தினமணி | கெய்ல் அதிரடியில் பெங்களூர் வெற்றி வெப்துனியா | |||||||||||||||
முன்னாள் முதல்வர்களுக்கு சம்மன் தினமலர் | ||||||||||||||||
நாளை உயருகிறது பெட்ரோல் விலை தினகரன் | அஸ்லான் ஷா ஹாக்கி: பாகிஸ்தான்-இந்தியா போட்டியில் பாக்., வெற்றி ஆறாம்திணை | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர். 1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான். 1780 - அமெரிக்க புரட்சிப் போர்: தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் நகரம் பிரித்தானியப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 1797 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான். 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர். 1881 - வட ஆபிரிக்காவில் துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. 1922 - 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது. 1937 - ஆறாம் ஜோர்ஜ் மன்னன் பிரித்தானியாவின் மன்னனாக முடி சூடினான். 1949 - சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது. 1952 - காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான். 1965 - சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது. 1978 - சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர். 1981 - ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிஸ் ஹியூஸ் சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார். 1982 - போர்த்துகலில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. பிறப்புக்கள் 1820 - புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி (இ. 1910) 1843 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி அறிஞர் (இ. 1922) 1895 - ஜே. கிருஷ்ணமூர்த்தி, இந்தியத் தத்துவ அறிஞர் (இ. 1986) இறப்புகள் 2001 - அலெக்சி தூபோலெவ், ரஷ்ய விமான வடிவமைப்பாளர் (பி. 1925) சிறப்பு நாள் உலக செவிலியர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.15 | பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal) |
2.3.15 |
Appraising enemy's skills | |||||||||||||
Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes | ||||||||||||||||
குறள் எண் 877 | ||||||||||||||||
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க | ||||||||||||||||
nOvarkka nonthathu aRiyArkku mevaRkka menmai pagaivar agaththu. | ||||||||||||||||
To those who know them not, complain not of your woes; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. | Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
போனால் வராதாது ஒன்றே ஒன்று ; அது பொழுதே. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment