அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௩ய (30) , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
மின் விலாங்குமீன்கள் 660 வோல்ட் திறனுள்ள மின் அதிர்வுகளை உண்டாக்கவல்லவை. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ராகுல் கைதுக்கு எதிர்ப்பு; உ.பி.யில் சாலை மறியல் 10000 ... தினமணி | அமெரிக்க பங்கு சந்தை மோசடி: ராஜரத்னம் குற்றவாளி என அறிவிப்பு! தட்ஸ்தமிழ் | |||||||||||||||
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை தினத் தந்தி | தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் வசிக்கிறார் தினத் தந்தி | |||||||||||||||
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி மாயாவதி கடும் ... தினகரன் | முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெப்துனியா | |||||||||||||||
பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம் : டீசல், சமையல் காஸ் தப்பியது தினமலர் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1765 - யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான். 1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார். 1830 - எக்குவாடோர் விடுதலை அடைந்தது. 1846 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது. 1861 - பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது. 1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். 1888 - பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது. 1913 - நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார். 1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர். 1943 - இரண்டாம் உலகப் போர்: வட ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர். 1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. 1954 - சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது. 1960 - உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர். 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார். 1981 - ரோமில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். 1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர். 1998 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது. 1998 - இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன. 2006 - திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார். பிறப்புக்கள் 1882 - ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963) 1905 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977) 1918 - பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984) 1956 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு 1978 - மைக் பிபி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1898 - பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872) 1978 - வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933) 2001 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.15 | பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal) |
2.3.15 |
Appraising enemy's skills | |||||||||||||
Better than knowing, endeavour to overcome and befriend, biuld safeguards, but not hesitate to destroy defying foes | ||||||||||||||||
குறள் எண் 877 | ||||||||||||||||
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் | ||||||||||||||||
vagaiyaRinthu thaRseithu thaRkAppa mAyum pagaivarkaN patta serukku | ||||||||||||||||
Know thou the way, then do thy part, thyself defend; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும். | The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
உண்மையான அறிவாளி தன ரகசியத்தை தானே வைத்துக் கொள்ள வேண்டும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment