Monday, April 11, 2011

Daily news letter 11-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நீங்கள் ரத்த தானம் தர விரும்பினால் உங்களின் பெயர், ஊர், ரத்த வகை  மற்றும் தொலைபேசி எண்களை எங்களிடம் அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். இந்த முயற்சி, தானம் தர விரும்புவோரின் பட்டியலை தயாரித்து நம் வலை தளத்தில் வெளியிடவும், அவசர காலத்தில் தேவைப்படுவோர் இப்பட்டியல் மூலம் தானம் கொடுப்போரை தொரடுகொள்ளவும் வழி செய்யவும் ஆகும்.

இதுவரை 10 பேர் மட்டுமே தங்கள் தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த முயற்சி உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் உதவும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட இடம் சார்ந்த பட்டியல் அல்ல. எனவே உலகின்  எம்மூலையில் இருந்தாலும் தயவு செய்து தானம் தர முன்வருவோர் தங்கள் தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முன்பே  தமது விருப்பத்தை தெரிவித்தோர் மீண்டும் தெரிவிக்க தேவையில்லை.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 28 (௨௮), திங்கள் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilnotes.com/

ஒரு வர்த்தக நோக்கற்ற தன்னார்வ கல்வி இணையம்.  உலகியல் விடையங்களின் கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விணையத்தில் பிரசுரமாகின்றன.  

தெரிந்து கொள்ளுங்கள்  

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

நடிகர் வடிவேலுக்கு கொலை மிரட்டல் தினத் தந்தி

தேயிலை ஏற்றுமதி சரிவு தினகரன்

தேசிய தலைவர்கள் முற்றுகையி்ட்ட தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது  தினமலர் 

சாய்பாபா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்  தினமணி

மத்திய அரசுக்கு ஆதரவான மாநில அரசு தேவை  தினகரன் 

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு; 5 லட்சம் பேர் எழுதினார்கள் வெப்துனியா

ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது: ராகுல் காந்தி தினமணி

நாடு திரும்பும் திட்டம் : கைவிட்டார் முஷாரப்  தினமலர் 

லோக்பால் வரைவுக்குழு உறுப்பினர்களை மாற்ற முடியாது: அண்ணா ஹஸôரே  தினமணி

பேமிலி சர்க்கிள் கோப்பைக்கான சர்வதேச போட்டி ... நக்கீரன் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.

1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.

1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.

1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.

1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.

1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.

1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

2002 - வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.

பிறப்புகள்

1869 - கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.13

இகல்(Igal)

 

2.3.13

 

HATRED

குறள் எண்  860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

igalAnAm innAtha ellAm nagalAnAm

nannayam ennum serukku.

From enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow.

பொருள்

Meaning

மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

இன்றைய பொன்மொழி

முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம்; நாளைய உறுதிநிலை

இன்றைய சொல்(Today's Word)

ஓணம் (பெ)

VOnam

பொருள்

Meaning

நதி     

River

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: