ஒரு வேண்டுகோள்
இன்று தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாக்கு பதிவு. வாக்கு பதிவு செய்வது நீங்கள் நாட்டிற்காக ஆற்றும் தலையாய கடைமைகளில் ஒன்று. இது உங்கள் உரிமை அல்ல உங்களின் கடைமை. மனசாட்சியை மட்டுமே துணை நிறுத்தி யாரால் நாட்டு மக்களுக்கு சிறிதளவேனும் நன்மை பயக்குமென எண்ணுகிறீர்களோ அவர்களுக்காக உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.
செல்லும்போது உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள். வயதானோர், உடல் நலமில்லதோர் மற்றும் பெண்களுக்கு வாக்கு பதிவு செய்வதில் முன்னுரிமை அளிக்கவும்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||
பங்குனி 30 , புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||
பொருளடக்கம் முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||
தொடங்கியது வாக்குப்பதிவு-பயப்படாமல் வாக்களிக்குமாறு தேர்தல் ... தட்ஸ்தமிழ் | ||||||||||||||
பொருளாதார வளர்ச்சி 8.2% ஆகும் தினகரன் | ஜப்பானில் 2-வது நாளாக நேற்று மீண்டும் பூகம்பம் தினத் தந்தி | |||||||||||||
ஐ.நா. அமைப்பின் இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வு தினத் தந்தி | தங்கம் சவரனுக்கு ரூ 80; வெள்ளி கிலோவுக்கு ரூ 545 குறைந்தது! தட்ஸ்தமிழ் | |||||||||||||
தே.மு.தி.க.,வுக்கு எதிராக வழக்கு: விஜயகாந்துக்கு நோட்டீஸ் தினமலர் | ||||||||||||||
பிரதமர் மன்மோகன்சிங் சீனா சென்றார் தினத் தந்தி | ||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||
நிகழ்வுகள் 1111 - ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான். 1829 - பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது. 1849 - ஹங்கேரி நாடு குடியரசானது. 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது. 1868 - பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில் அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது. 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது. 1939 - இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1941 - ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது. 1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது. 1953 - இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார். 1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார். 1970 - அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது. 1974 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது. 1975 - லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1984 - இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது. 1987 - மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது. 1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார். 2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது. பிறப்புகள் 1743 - தோமஸ் ஜெபர்சன், மூன்றாவது அமெரிக்க அதிபர் (இ. 1826) 1906 - சாமுவேல் பெக்கெட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் (இ. 1989) 1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1959) 1934 - டேம் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்மணி 1939 - சீமுஸ் ஹீனி, நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் 1941 - மைக்கல் பிரௌன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர். 1949 - கிறித்தபர் ஃகிச்சின்சு, அமெரிக்க எழுத்தாளர், ஊடவியலாளர் 1963 - காரி காஸ்பரோவ், ரஷ்ய சதுரங்க ஆட்டக்காரர். இறப்புகள் 1605 – பொரிஸ் குதூனொவ், இரசியப் பேரரசன் (பி. 1551) | ||||||||||||||
இன்றைய சிறப்புக் குறள் | Today's Special Kural | |||||||||||||
நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய அரசு எப்படிப்பட்ட தகுதியை கொண்டிருக்கவேண்டும் என திருவள்ளுவர் கூறும் வழி. | ||||||||||||||
குறள் எண் 385 | ||||||||||||||
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த | ||||||||||||||
iyatRalum Etttalum kAththalum kAththa vaguththalum valla tharasu. | ||||||||||||||
A king is he who treasure gains, stores up, defends, | ||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். | The good ruler is one who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it for the people. | |||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||
தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் ஆகிய மூன்றும் வாழ்க்கையில் தலை சிறந்த முன்னேற்றத்தை அளிக்கக்கூடியவை. | ||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||
No comments:
Post a Comment