Saturday, October 10, 2009

Daily news letter 10-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 10, புரட்டாசி - 24, ஷவ்வால் – 20

 

Today in History

680 - முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு வருகிறது.

1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991 - தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பிறப்புக்கள்:

1888 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972)

1906 - ஆர். கே. நாராயண், இந்திய எழுத்தாளர் (பி. 2001)

1908 - கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980)

1930 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (இ. 2008)

இறப்புகள்:

1973 - பாபநாசம் சிவன், கருநாடக இசை, தமிழிசை அறிஞர் (பி. 1890)

1974 - மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)

2000 - சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர், (பி. 1916)

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

 

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்தார். இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். "வந்தே மாதரம்" பாடலின் மூலம் தமது இளமையிலேயே சுதந்திர உணர்வைத் தூண்டப்பெற்றவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் காந்திஜியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்மை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்

 

மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

 

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் (ஆர். கே. நாராயண்), ஓர் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் உணர்ச்சிபூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப் பட்டவையாகும். நாராயணனின் இளைய சகோதரரான ஆர்.கே.லக்ஷ்மன் இந்தியாவில் பிரபல் காட்டூன் சித்திரங்களை வரைவதில் பிரபலமானவர்.

 

கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - தமிழிசை, நாடகம், அரசியல், திரைப் படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்று போற்றப்பட்டார்.

 

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973) அவர்கள் கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிப் புகழ்சமைத்த இசை அறிஞர் ஆவார்.

 

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

430

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.
serukkum sinamum sirumaiyum illAr

perukkum perumitha n-eerththu.

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,

To sure increase of lofty dignity attain.

பொருள்

Meaning

இறுமாப்பு*, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

இன்றைய பழமொழி

Today's Proverb

எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

eRumbu oorak kallum theiyum

Even ants can wear out a rock (literal)

Meaning

Persistence never fails.

இன்றைய சொல்

Today's Word

இறுமாப்பு பெ.

IrumAppu

பொருள்

Meaning

1.  பெருமிதம் (perumitham)

2.  செருக்கு, கர்வம் (serukku, garvam)

1.  Feeling of exultation.

2.  Pride, self-esteem.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: