Monday, October 5, 2009

Daily news letter 05-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 05, புரட்டாசி - 19, ஷவ்வால் – 15

இன்று:  அனைத்துலக ஆசிரியர் நாள்

1994ம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை உலக ஆசிரியர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.  ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

This year, World Teachers' Day will focus on the role of teachers within the context of the global financial and economic crisis and the need to invest in teachers now as a means to secure post-crisis regeneration.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) ஓர் ஆன்மீகவாதி ஆவார். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தையும், சத்திய ஞான சபையையும் நிறுவியவர் வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள். 'எல்லா உயிரையும் தம் உயிர் போல எண்ணுதல் வேண்டும். ஜீவஹிம்சை கூடாது. புலால் உண்ணக் கூடாது' என்று பல ஜீவகாருண்யக் கருத்துக்களை முன்வைத்தவர். 'உயிர்களின் பசிப்பிணி போக்குவதே இறைவனை அடையும் எளிய வழி' என்று அன்பர்களுக்கு எடுத்துரைத்தவர். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார்.

அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும்  (சமரச சமயம்) சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார். 4 ஆகஸ்ட் 2009 இவர் பாடிய எட்டாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இவரது உரைநடை, கடிதங்கள், யாவும் தொகுக்கப்பெற்றுத் தனி நூலாக ஊரன் அடிகள் வெளியிட்டுள்ளார்.

சோ ராமசாமி (பிறப்பு: அக்டோபர் 5, 1934), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். சோ என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் Sultan of Sattire என்று வர்ணிக்கப்படுபவர்.

 

இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்து தந்தது. இவரது பத்திரிக்கை சேவைக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் வழங்கப்பட்டன.

 

 

Today in History

1780 - வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.

1799 - ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

1886 - தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.

1944 - பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.

பிறப்புக்கள்

1823 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) , இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)

1934 - சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர்

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.5

அறிவுடைமை

2.1.5

POSSESSION OF WISDOM

425

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.

evva thuRaivathu ulakam ulakaththOdu

Avva thuRaiva thaRivu.

As dwells the world, so with the world to dwell

In harmony- this is to wisely live and well.

பொருள்

Meaning

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

To live as the world lives, is wisdom.

இன்றைய பழமொழி

Today's Proverb

தெய்வம் காட்டும், ஊட்டுமா?

God will show us a way but will he put food into our mouth?

Theiyvam kAttum, uuttumA?

"God gives every bird its food, but does not throw it into the nest."

இன்றைய சொல்

Today's Word

எடுத்தலோசை பெ.

eduththalOsai

பொருள்

Meaning

1.  உயர்த்தி ஒலித்தல் (uyarththi oliththal)

1.  Acute accent, sharp tone.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: