. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||||
அக்டோபர் - 04, புரட்டாசி - 18, ஷவ்வால் – 14 | |||||
இன்று: உலக விலங்கு நாள் (World Animal Day), இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான "பிரான்சிஸ் அசீசி" என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக விண்வெளி வாரம் ஆரம்பம், உலகின் முதல் செயற்கைகோளான ரஷ்யாவின் "ஸ்புட்னிக்" 1957ம் ஆண்டு அக். 4ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் 1967 அக்.10ம் தேதி கையெழுத்தானது. விண்வெளி தொடர்பான இந்த இரண்டு முக்கிய சம்பவங்களை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக். 4 முதல் அக். 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரமாக அறிவித்துள்ளது. ஐ.நா., இந்தியா உள்ளிட்ட 50 நாடுகள் விண்வெளி வாரத்தை கொண்டாடி வருகின்றன. This year's theme is "Celebrating Human Space Flight: Past, Present and Future."
| |||||
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.
இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். | "வீரமுரசு" சுப்பிரமணிய சிவா (1884-1925), அரசியல், பத்திரிகைப் பணிகள் முதலானவற்றுடன் தமிழ்ப் பணியிலும் தடம் பதித்தவர். தேசியச் செம்மல் வ.உ.சி.யுடன் 3.2.1908 முதல் இணைந்து மேடைத் தமிழை வளர்த்தார் சிவா.
"ஞானபானு" அவரால் 1913 ஏப்ரல் மாத இதழாகத் தொடக்கம் பெற்றது. தாம் எழுதியதோடல்லாமல், பாரதியார், வ.வே.சு.ஐயர், வ.உ.சி., மகேசகுமார் சர்மா, வ.ரா முதலான தமிழ்ச் சான்றோர்களையும் ஞானபானுவில் எழுதவைத்தார். "பிரசங்க மாரி பெய்தனன் நஞ்சிவம் நரசிங்க மென்றிடக் கர்சித்து நின்றே!" என்று சிவாவின் மேடைத்தமிழைப் பாராட்டியுள்ளார் வ.உ.சி. பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பில் வீரமுரசாக ஒலித்த சிவா, தமிழ் வளர்ச்சிப் பணியில் "தமிழ் முரசா"கவும் ஒலித்தார். | ||||
Today in History | |||||
1883 - ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் துவக்கப்பட்டது 1957 - முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 1959 - லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது. பிறப்புக்கள் 1884 - சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925) 1904 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1932) | |||||
|
| ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2. | பொருட்பால் | 2. | Wealth | ||
2.1 | அரசியல் | 2.1 | Royalty | ||
2.1.5 | அறிவுடைமை | 2.1.5 | POSSESSION OF WISDOM | ||
425 | உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. Ulakam thazeeiya thotpam malarthalum kUmpalum illa thaRivu. Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed. | ||||
பொருள் | Meaning | ||||
உயர்ந்தோரே உலகோர்* எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். | To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower). | ||||
இன்றைய பழமொழி | Today's Proverb | ||||
வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது | The thorns put up for a hedge have hurt the feet. | ||||
vElikkup pOtta muL mun kAlukku vinaiyaassuthu | Said if those who should protect one become one's foes. | ||||
இன்றைய சொல் | Today's Word | ||||
உலகோர் பெ. | ulakOr | ||||
பொருள் | Meaning | ||||
1. உலக மக்கள் (Ulaka makkaL) | 1. People of the world, people at large. | ||||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment