Wednesday, July 16, 2008

Contact numbers of Grocery store, Priests, Caterers etc., in Noida/Indirapuram/MayurVihar(Delhi)

Kindly visit and book mark http://avvaitamilsangam.googlepages.com/importantcontactsto know the addresses and contact numbers which may be useful to yourdaily activities. If you wish to add some please send details to avvailtamilsangam@gmail.com

Daily news letter 16-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

NEXT PROGRAM FROM AVVAI TAMIL SANGAM ON
27-7-2008. FOR DETAILS VISIT http://avvaitamilsangam.googlepages.com/programs
========================================================================================================
July 16 2008 ஸர்வதாரி ஆடி-1/ ரஜப் – 13
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
Who wreak their wrath as worthless are despised;Who patiently forbear as gold are prized
Meaning :
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
தினம் ஒரு சொல்
அமயம் - நல்ல சமயம், நல்ல வாய்ப்பு, RIGHT TIME, OPPORTUNE MOMENT
பொன்மொழி
பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன். தன்னை அறிந்தவன் ஞானி.
பழமொழி – Proverb
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

Tuesday, July 15, 2008

Daily news letter 15-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam (காமராஜர் பிறந்தநாள்)

July 15 2008 ஸர்வதாரி ஆனி 31/ ரஜப் – 12 (காமராஜர் பிறந்தநாள் )
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)

154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யழுகப் படும்.
Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain.
Meaning :
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
தினம் ஒரு சொல்
அம்புயம் - தாமரை, LOTUS
பொன்மொழி
தானம் எவனையும் வறியவன் ஆக்கியதில்லை
பழமொழி – Proverb
தனக்கு மிஞ்சினால் தானம்

Monday, July 14, 2008

Daily news letter 14-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 14 2008 ஸர்வதாரி ஆனி 30/ ரஜப் – 11
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)


153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.
The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart.
Meaning :
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.


தினம் ஒரு சொல்
அம்புதி - கடல், OCEAN


பொன்மொழி
அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு


பழமொழி

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

Sunday, July 13, 2008

Daily news letter 13-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 13 2008 ஸர்வதாரி ஆனி 29/ ரஜப் – 10

இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)


152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Forgiving trespasses is good always;Forgetting them hath even higher praise;

Meaning :
அளவுகடந்து செய்யப்பட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்த தீங்கை அறவே மறந்துவிடுவதே சிறந்த பண்பாகும்.
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

தினம் ஒரு சொல்
அம்புதம் - மேகம் CLOUD, AS BESTOWING WATER

பொன்மொழி
ஆஸ்தியை தேடுமுன் அறிவைத் தேடிக்கொள்

பழமொழி – Proverb
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

Saturday, July 12, 2008

Daily news letter 12-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam


NEXT PROGRAM FROM AVVAI TAMIL SANGAM ON
27-7-2008. FOR DETAILS VISIT
http://avvaitamilsangam.googlepages.com/programs
========================================================================================================
July 12 2008 ஸர்வதாரி ஆனி 28/ ரஜப் – 9
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.12 பொறையுடைமை (Forgiveness)
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best.

Meaning :
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

தினம் ஒரு சொல்
அம்பா - தாய், MOTHER

பொன்மொழி
சுதந்திரம் இல்லாத தேசம், உயிர் இல்லாத உடலைப் போன்றது.

பழமொழி – Proverb
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

Friday, July 11, 2008

Daily news letter 11-7-2008 , Kuralum Porulum from Avvai Tamil Sangam

July 11 2008 ஸர்வதாரி ஆனி 27/ ரஜப் – 7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.11. பிறனில் விழையாமை (Against Coveting Another's Wife)


150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not.

Meaning :
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

தினம் ஒரு சொல்
அம்பணம் - மரக்கால், A GRAIN MEASURE
அம்பணம் - நீர் செல்லும் குழாய், WATER-PIPE
அம்பணம் - யாழ் வகை, A KIND OF LUTE

பொன்மொழி
உண்மை நட்பு இல்லாத நிலையே, மிகக்கொடிய தனிமை.

பழமொழி – Proverb
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.