Friday, April 13, 2012

13-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் .....

13-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௧ (1),வெள்ளி,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

ஒருவன் சிரிக்கும்போதெல்லாம் மரணம் தள்ளிப் போடப்படுகிறது

குறளும் பொருளும் - 1151

காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

Translation:

If you will say, 'I leave thee not,' then tell me so;

Of quick return tell those that can survive this woe.

பொருள்:

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

Explanation:

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

உங்களுக்குத் தெரியுமா?

பொருளாதார அல்லது சமூக கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்தல் தாராளமயமாக்கல் எனப்படும்.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...)

'தை'அன்னையா? சித்திரை அன்னையா? நம் அன்னையா?

இன்று முகநூலில் எங்கு பார்த்தாலும் ஒரே சண்டை. சிலர் ஏப்ரல் 14 தான் புத்தாண்டு என்று சொல்ல, சிலர் ஜனவரி 14 தான் புத்தாண்டு என்று சொல்ல, நீயெல்லாம் தமிழனா? என்று பிறப்பை சந்தேகப்படுத்திக் கூட சில கேள்விகள். மொத்தத்தில் தமிழனுக்கே உரித்த விழாவான பொங்கலை புத்தாண்டு என்பதா? சித்திரையை புத்தாண்டு என்பதா? என அடிதடி. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நாம் அடித்துக்கொள்ளும் இரண்டு விஷயங்களும் இந்தியாவுக்கே உரித்தானவை. இந்திய மண்ணில் உருவானவை. எங்கிருந்தோ வந்த ஆங்கில நாள்காட்டியை உபயோகிப்பதில் நாம் என்றுமே வருதப்பட்டதில்லை அடித்துக்கொள்ளவில்லை அரசியலாக்கவில்லை. டிசம்பர் முதலே காலெண்டர் கிடைக்குமா, டைரி கிடைக்குமா என பத்து பைசா மிட்டாய் வாங்கும்போது கூட எதிர்பார்க்கிறோம். ஆனால் சில இடங்களில் மட்டுமே உபயோகிக்கப்படும் இந்திய/தமிழ் நாள்காட்டிக்கு பெரிய சண்டை. நாம் தமிழ் நாள்காட்டியை அதிகம் உபயோகப்படுத்தும் ஒரே இடம் கல்யாண பத்திரிக்கை மட்டும்தான். அதிலும் முடிந்தால் தமிழ் தேதியை மட்டுமே ( ஆங்கிலத் தேதி குறிப்பிடாமல்) எழுதிப்பாருங்கள். என்னிக்கு கல்யாணம்னு தேதியே போடலையே என அனைவரும் கேட்பர். உங்களுக்கு இந்தியாவின் தேசிய நாள்காட்டியின் முதல் நாள் எது எனத் தெரியுமா? மார்ச் 22ம் தேதியில் துவங்கும் saka calender தான் இந்தியாவின் தேசிய நாள்காட்டி. இந்த தேதிகள் அரசு குறிப்பேடுகள் தவிர எங்காவது உபயோகத்தில் உள்ளதா? ம் ..ம்.. இதையும் அரசியலாக்க முடியுமா என யோசிக்க துவங்காதீர்கள்..

உலகில் உள்ள நாள்காட்டிகள் என்னென்ன? அவை எதை ஆதாரமாக கொண்டுள்ளன? என பார்ப்போம். பெரும்பாலான நாள்காட்டிகள் சூரியனின் அல்லது சந்திரனின் நிலையை ஆதாரமாகக் கொண்டவை. பூமி உருண்டையா, தட்டையா, சுற்றுதா, இல்லையா என்று கூட தெரியாத நிலையில் கண்ணுக்குத் தெரிந்த விஷயங்களை கொண்டே காலங்களை வகுத்தனர்.

நாம் சூரியனின் நிலையை வைத்து நாள்காட்டியை கணித்தோம். இரவும் பகலும் ஒரே அளவில் இருக்கும் வசந்தகால சம இரவுப் (Vernal Equinox ) புள்ளியை ஆரம்பமாக வைத்து நாம் இருக்கும் பூமியை நிலையாகக் கருதி சூரியன் எல்லாப் பருவ நிலைகளையும் கடந்து இதே இடத்திற்கு திரும்ப வரும் நாள் ஒரு வருட முடிவு என்று முடிவெடுத்தனர். இது ஒரு அயனமண்டல வருடம். நம்மாளு அப்பவே கொஞ்சம் அதிக புத்திசாலி.. என்னைக்காவது ஒருத்தன் பூமியும் சுத்துது, கொஞ்சம் தள்ளாடிக்கிட்டே சுத்துது அதனாலே பூமியை நிலைன்னு நினைச்சா சூரியன் அதே இடத்துக்கு வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆவும். அதவிட மேல இருக்கிற நட்சத்திரத்தை நிலையா நினச்சு வருடத்த கணிப்போம்ன்னு பண்ணதுல நாம நட்சத்திர வருடக்கணக்கை பின்பற்றுகிறோம். இதனால் நம்ம புது வருட நாள் ஏப்ரல் மத்திக்கு வந்திருச்சு. சும்மா சொல்லக் கூடாதுங்க சரியாதான் யோசிச்சிருக்கார் நம்மாளு....இன்னிக்கு ஜோசியத்துல ( நாள் /நேரக் கணிப்பு மட்டும் – கிளி ஜோசியம் அல்ல) நம்ம கணக்குதாங்க துல்லியம்.

நாம மட்டும் இல்லீங்க நம்மைப்போல பல நாடுகள் ஏப்ரல் 13-14 தேதிகளில் புது வருடத்தை கொண்டாடுது. வருடம் என்பது என்னங்க நமக்கு நாமே போட்டுகிட்ட ஒரு கணக்கு. கிளம்பின இடத்துக்கே திரும்ப வந்தா ஒரு சுத்து சுத்தி வந்தோம்னு சொல்றதில்லையா அதுமாதிரி. நாம பிறந்த அன்னிக்கு தானே பிறந்த நாள் கொண்டாடுறோம். கரு தரித்த அன்று இல்லையே. அதைப் பத்தி நாம சண்டை போட்டதில்லையே. ( பிறந்த நாள் என்றதும் ஒரு சின்ன சந்தேகங்க --அம்மாவிற்கும், அப்பாவிற்கும் என்னை படைத்த நாளுக்கு நன்றின்னு என்னிக்காவது சொல்லியிருக்கமா? நான் பிறந்த நாள் அப்பிடீன்னு ஏங்க சொல்றோம்? நமக்கு ரொம்ப சுயநலமுங்க...) அதுபோல வருடம் என்பது ஒரு கணக்குதான். இப்ப கல்யாணத்தில பாருங்க தாலி முடியும்போது கெட்டிமேளம் வாசிப்பாங்க. சத்தமா இருக்கும். ஏன்னா இரண்டு பேர் ஒரு புதிய உறவை துவக்கப் போறாங்க அந்த சமயத்தில யாராவது எங்காவது பேசும் அமங்கல வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க வெளிச் சத்தத்தை அடக்கும் ஒரு மங்கள இசை. ( இனிமே இந்த நாதஸ்வரம் மாதிரி மனைவி ஊதிகிட்டே இருப்பா, வேற யாரு பேசற சத்தமும் இனி உனக்கு கேட்காது, அம்மா ஒருபக்கம், மனைவி ஒருபக்கம்னு மத்தளத்தில அடி வாங்கிற மாதிரி வாங்குவ, அந்த பக்கம் சத்தமே இல்லாம ஒருத்தர் ஒத்து ஊதறார் பாரு அதுதான் இனிமே நீ என்று மணமகனுக்கு இந்த கெட்டிமேளம் சொல்வதாக சிலர் நினைப்பதுண்டு) அதுபோல வருடம் நல்லாத் துவங்க நாம் கோவிலுக்கு செல்வது, பூசை செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்வது என பழக்கத்தில் கொண்டுள்ளோம். இன்னொன்னு பாருங்க... வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது, உன்னை வாழ்த்துவோரும் உண்டு, தாழ்த்துவோரும் உண்டு, தூற்றுவோரும் உண்டு, கரிப்போரும் உண்டு,அனைவரையும் அனுசரித்து செல்லவேண்டும் அவை அனைத்திலும் உள்ள நல்லத் மட்டும் எடுத்துக் கொண்டேயானால் நீ நல்ல இருப்பே என்று உணர்த்தத்தான் எல்லா சுவை உள்ள உணவுகளையும் அன்று உண்கிறார்கள். (வேப்பம்பூ கசந்தாலும் உடலுக்கு நல்லதுதானே?)

நக்கீரர் (பத்திரிக்கையாளர் நக்கீரன்-அல்ல) கூட நெடுநாள் வாடையில், சூரியன் மேஷ/சித்திரை துவங்கி 12 ராசிகள் செல்வதாக குறிப்பிட்டுள்ளார், தொல்காப்பியர் ( கோலங்கள் தொடர் தொல்காப்பியன் அல்ல) வருடம் ஆறு காலங்கள் எனவும், சித்திரை இளவேனிலின் துவக்கம் எனவும் குறிப்பிடுகிறார் என்று தகவல்கள் உள்ளது. (இந்த மாதிரி ஒரு மேற்கோள் குடுத்தா அதை படிச்சு பாக்க பயந்து அவிங்க சொன்னா சரியா இருக்கும் என்று நம்மில் பலர் நம்புவதால் இது இங்கே குறிப்பிடப்படுகிறது தயவு செய்து இதை படித்த யாரும் சண்டைக்கு வரவேண்டாம் )

பொங்கல் என்பது தனிங்க.. அது நாம், நமக்கு வாழ்வின் ஆதாரமான உணவு, உன்னத தொழிலான விவசாயம் ஆகியவற்றிக்கு உதவிய சூரியன், நிலம், வாயு, நீர், நெருப்பு,வான், மழை, விலங்கினங்கள் ஆகியவற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நாள். இது ஒரு வெறும் கணக்கு நாள் அல்ல. மனதார நன்றி தெரிவிக்கும் நாள். தப்பா ஏதாவது சொல்லியிருந்தா/ செய்திருந்தா மன்னித்து அதை கழித்துவிடு எனச் சொல்ல பழயன கழிதலும் என போகியிலும் , இயற்கையே! நீ செய்த உதவிகளுக்கு நன்றி, உன் உதவியால் நான் பெற்ற உணவு, எப்படி என் மன சந்தோஷத்தைப் போல் பொங்குகிறது பார் என பொங்கல் அன்று பொங்கல் வைத்தும். எங்கோ காட்டில் நிம்மதியாக சுதந்திரமாக வாழ வேண்டிய நீ, நான் குடுத்த சிறு அளவு உணவை உண்டு, நீ என்னை நம்பினாலும், நான் உன்னை நம்பாமல், எங்காவது நீ ஓடிவிடுவாயோ என கட்டிப் போட்டதையும் சகித்து ஒரு அடிமைபோல எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி எனக்கு பணி புரிந்தாயே என விலங்கினங்களுக்கு பொங்கல் வைத்தும் நன்றி சொல்லும் நாள். அந்த மிகச் சிறந்த தைத் திருநாள் அதன் மதிப்பு குறையாமல் இருக்கட்டும். அதை ஏன் ஒரு வெறும் கணக்கு நாளாக மற்ற வேண்டும்.

புத்தாண்டைப் பற்றி சண்டை போடுவதை விட பிறந்தநாள் என்பது இனி தாய்-தந்தைக்கு நன்றி தெரிவிக்கும் நாள் என மாற்ற ஏன் நாம் மாத்தி யோசிக்கக் கூடாது? நமக்காக சாதரணமாக உடல் தாங்கும் வலியை விட பல மடங்கு வலியை சகித்து இன்று "நான்" என மார்தட்டிக்கொள்ள அன்று நமை ஈன்ற அன்னைக்கு ஒரு கிப்ட் ஏன் வாங்கி தரக்கூடாது? புதிய தலைமுறைக்கு ஒரு மாறுதலான சிந்தனையைத் தாருங்கள்...

Jobs Available

தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

· நிருபர்கள் ( Reporters)

· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)

· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)

· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)

தகுதிகள்:

· பட்டதாரி

· 45 வயதிற்கு உட்பட்டவர்

· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்

· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்

· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.

புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

13-4-2012,

6.30 PM

Kali mandhir, Pocket 7, Sector-2. Rohini

Panchanga padanam followed by Kolaattam

13-4-2012

6-6.30 pm

Sri Sankatahara Ganapathy Temple at Vasundhara Enclave

PANCHANGA PADANAM by Shri Somaskanda Sastrigal

R.K. Vasan, President 9810730983

16/17-4-2012

7 PM

Stein Auditorium, India habitat Centre, Lodhiroad, New Delhi

Swathi Smriti 2012

Bi Century celebration of Maharaja Swathi Thirunaal

Rasikapriya

9818192497, 9810429874

22-4-2012

8 AM – 10 AM

Hare Krishna Mandhir (ISKON Temple), Opp to NTPC Office, Sector 33, Noida

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on "Ramanum Krishnanum".

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

22-4-2012

11:15 AM

Loka kala Manch auditorium (Lodhi Road – near ram mandir)

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Ramanujars' Bagavadh Gita bashyam

21/22-4-2012

7-9 PM

Delhi Tamil Sangam

RK Puram. NDelhi

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Rama Brahmam

Delhi Tamil Sangam & Nadha Brahmam

Accomadation required

Looking out for a decent room in centre of Delhi, close to ITO, or want an accommodation as paying guest (PG) for News Editor of Dinamani, Delhi. Contact 9711001211.

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: