குறளும் பொருளும் - 1148 காமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல் அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. Translation: When he who said 'Fear not!' hath left me blamed, \While many shrink, can I from rumour hide ashamed?. பொருள்: அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?. Explanation: When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal. உங்களுக்குத் தெரியுமா? பண்பலை என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும். "நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...) வளை காப்பு கர்ப்பிணிகளுக்கு 7ம் மாதத்தில் வரும் ஒரு சடங்கு வளைகாப்பு. இச்சமயத்தில் தாயாகப்போகும் அந்தப் பெண்ணிற்கு அனைவரும் கண்ணாடி வளையல்களை அணிவிப்பர். ஏன் கண்ணாடி வளையல், ஏன் 7-ம் மாதம்? காரணங்கள் 1. குழந்தையின் வளர்ச்சியில் ஏழாம் ,மாதம் பெறும் மாற்றங்கள் நிகழ்கின்றன. குழந்தை 6ம் மாதத்தில் தானே சுவாசிக்க பயிற்சி பெறுகிறது. ஏழாம் மாதத்தில் குழந்தை வெளிச்சம் இருட்டு ஆகியவற்றை உணரத் துவங்குகிறது, மேலும் தாயின் இதயத் துடிப்பு, பேசும் குரல், மற்றோர் பேசுவது ஆகியவற்றை கேட்க துவங்குகிறது. நீங்கள் நீச்சல் குளத்தினுள்ளே இருக்கும்போது வெளியில் பேசுவதை எப்படி உணரமுடியுமோ அதுபோல். குழந்தைக்கு வலையள்மொழி ஒரு காப்பாக அமைகிறது. 2. தாய்க்கு இந்த சமயத்தில் ஒரு முழு குழந்தையை உணரமுடியும்போது பிரசவத்தைப் பற்றிய கவலை, மன அழுத்தம், ஆவல் ஆகியன அதிகமாகிறது. மேலும் குழந்தை உதைப்பதொடு மட்டுமின்றி இங்கும் அங்கும் அசையத் துவங்குவதால் தன்னியரியாமல் தாய்க்கு ஒரு பயம் உண்டாகிறது. இசை இந்த நிலையை தளர்த்தி ஒரு ஆறுதலைத் தர வல்லது. தாய்க்கு தேவையான இசை சேர்க்க வளையல் , கொலுசு என்ற பொருள்கள் உதவுகிறது. குழந்தைக்கும் தன் பக்கத்தில் யாரோ உள்ளனர்என்ற ஒரு பந்தத்தின் துவக்க நிலையை தருகிறது. 3. இந்த சமயத்தில் தாய்க்கு அதிகம் தூக்கம் தேவை. தூக்கத்தில் தன்னை மறந்து இங்குமங்கும் திரும்பி படுக்கும் நிலை வந்தால் குழந்தைக்கு எதாவது ஆகிவிடுமோ எனும் அச்சத்தில் தாய்க்கு ஒரு அலாரமாக இந்த கண்ணாடி வளையல்கள் உதவுகின்றன. வளையல்கள் உடையக்கூடாது எனும் ஒரு கட்டளை மூலம் தாய்க்கு நீ உன்மேல் எப்போதும் கவனமாயிரு எனும் ஒரு எச்சரிக்கை திணிக்கப்படுகிறது. தாய் எந்த நிலையிலும் விழிப்புணர்வுடன் இருக்க வழி வகுக்கிறது. 4. ஏழாம் மாதம் முதல் அடுத்த இரு மாதங்கள், குழந்தை புது உலகிற்கு வந்தவுடன் தன்னை இந்த சுற்றுப்புறத்தோடு இணைத்துக்கொள்ள தேவையான சக்திகளைப் பெறும் மாதங்கள். கவனக் குறைபாடால் குழந்தை பிறப்பு முன்னமே ஏற்பட வாய்ப்புண்டு. இந்த சடங்குகள் கவக் குறைபாட்டை குறைக்க உதவும் ஒரு அறிவியல் விளக்கம். வளை தாயையும் சேயையும் காக்கும் சக்தியாக இருப்பதால் இந்த "வளைகாப்பு" ஒரு சடங்காக கொண்டாடப்படுகிறது. Jobs Available தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன · நிருபர்கள் ( Reporters) · முதுநிலை நிருபர்கள் (Senior Reporters) · உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors) · முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors) தகுதிகள்: · பட்டதாரி · 45 வயதிற்கு உட்பட்டவர் · நல்ல தமிழ் நடையில் எழுதுதல் · ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல் · பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 13-4-2012, 6.30 PM | Kali mandhir, Pocket 7, Sector-2. Rohini | Panchanga padanam followed by Kolaattam | | | 14-4-2012 6-6.30 pm | Sri Sankatahara Ganapathy Temple at Vasundhara Enclave | PANCHANGA PADANAM by Shri Somaskanda Sastrigal | | R.K. Vasan, President 9810730983 | Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment